4 நாள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்

1 Min Read

சென்னை, மார்ச் 29 தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள், வரும் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கடந்த 15ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 15ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் 30.3.2026 முதல் 6.4.2026 வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.3.2026, 1.4.2026, 3.4.2026 மற்றும் 5.4.2026 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 6.4.2026 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *