சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர்…பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவு நாள் பேரணி மற்றும் வீரவணக்கம்!

4 Min Read

பேரணியில் ஒரு ராணுவ வீரரைப் போல்
கழகத் தலைவர் மிடுக்குடன் நடந்து வீரவணக்கம் செலுத்தினார்!

தஞ்சை, மார்ச். 28, “பெரியாரை விட்டால் நமக்கு வேறு நாதியில்லை. புதியதோர் உலகம் காண ஜாதியற்ற; மூடநம்பிக்கை அற்ற; தன்னம்பிக்கை உள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக பட்டுக் கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள் அரும்பாடுபட்டார்கள்” என்று சுட்டிக்காட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் வீரவணக்க உரையாற்றினார்.

பேரணி – வீர வணக்க நிகழ்வு

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் நினைவு நாளை முன்னிட்டு பேரணியும், அவரது நினைவிடத்தில் வீர வணக்க நிகழ்வும் இன்று (28.03.2026)   காலை 10 மணிக்கு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தின் எதிரில் உள்ள பெரியார் பெருந்தொண்டர் கபிலர் நினைவரங்கம்; தந்தை பெரியாரின் நூற்றாண்டு மன்றம் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பேரணி கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் தொடங்கி, வடக்கு ராஜவீதி, வடக்கு வாசல் வழியாக தஞ்சாவூர் ராஜகோரி இடுகாட்டிலுள்ள பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் நினைவிடம் சென்றது. நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள், மலர் தூவி சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார்.

அஞ்சா நெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் சூளுரை!

அவர் தனது உரையில், “சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க நாள் முதல் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை தந்தை பெரியாரின் உற்ற தோழராய் இருந்தவர் பட்டுக்கோட்டை அழகிரி” என்றும், ‘‘தந்தை பெரியாரின் கொள்கை வழியில் புதியதோர் உலகம் காண ஜாதியற்ற; மூட நம்பிக்கைகள் அற்ற; தன்னம்பிக்கை உள்ள ஒரு சமூகத்தை படைக்க, தனது உயிர் மூச்சு இருக்கும் வரையிலும் அரும்பாடு பட்டவர் அழகிரி” என்றும் பாராட்டினார். அழகிரி அவர்களின் பணி எப்படிப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட, “பேரறிஞர் அண்ணா; முத்தமிழ் அறிஞர் கலைஞர்; இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரை, திராவிட மாடல் அரசாக மலர்ந்து இருப்பதற்கும்,  அதற்கு ஆணிவேராகவும்; அடிக்கல்லாக இருப்பவர்தான் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள் ஆவார்கள்” என்று அவரின் தொண்டின் ஆழத்தை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, “ஒரு எளிய தொண்டனால்; தன்னலமற்ற தொண்டினால் ஒரு சமூகத்தையே மாற்ற முடியும் என்பதை வாழ்ந்து காட்டி மறைந்த பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் நினைவு நாளில், அவரது கல்லறையின் முன்பு புதியதோர் சுயமரியாதை ஆட்சியை நிறுவுவோம் என்று சூளுரைப்போம்” என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார். முன்னதாக, அவர் அழகிரி அவர்களின் நினைவிடத்திற்கு வருகை தந்த போது தோழர்கள் அழகிரி அவர்களின் புகழை எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வண்ணம் ஒலி முழக்கங்கள் செய்தனர். முன்னதாக பேரணி தொடங்கும் இடத்தில் கழகத் தலைவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

திராவிடர் கழகம்

பங்கேற்றோர்

நிகழ்வில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், செயலாளர் அருணகிரி, குடந்தை மாவட்டத் தலைவர் கு. நிம்மதி, செயலாளர் துரைராசு, வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ், மகளிர் அணித் தலைவர் திரிபுரசுந்தரி, அரியலூர் மாவட்ட தலைவர் நீலமேகம், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் முருகன், வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ராஜா, தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிட மாணவ கழக மாநிலச் செயலாளர் செந்தூர பாண்டியன், தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், மாவட்ட மகளிர் அணித் தலைவர் கலைச்செல்வி, விடுதலை வாசகர் வட்டப் புரவலர் திருநாவுக்கரசு, தி.மு.க. தொழில்நுட்ப அணி கலைமணி, பாபநாசம் அழகிரி, பள்ளித் தாளாளர் ஜெயராமன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் ஜெகநாதன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குடும்ப விளக்கு நிர்வாகி வேணுகோபால், காங்கிரஸ் கட்சி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ராஜேந்திரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்  செல்வம், காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர்
மகேந்திரன், திராவிட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ.மோகன், திருவாரூர் மாவட்டத் தலைவர் அருண்காந்தி, காப்பாளர் வீர. கோவிந்தராசு, விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீரையன், தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் மா.நரேந்திரன் துணைச் செயலாளர் ரெ.சுப்பிரமணியன், மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மன்னை ஒன்றிய தலைவர் செ.தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், அம்மாபேட்டை ஒன்றியத் தலைவர் கி.ஜவகர், புதிய பேருந்து நிலையப் பகுதித் தலைவர் கலைச்செல்வன், செயலாளர் துரை, இ.பி.காலனி செயலாளர் பரந்தாமன், கரந்தை பகுதித் தலைவர் ப.விஜயன், தஞ்சை விசிறி சாமியார், தே.பொய்யாமொழி, மலர்க்கொடி, விஜயகுமார், சிகாமணி, பாக்கியம், இளவரசன், நெடுவை நேரு, திருவையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், குடவாசல் ஒன்றியத் தலைவர் ஜெயராமன், சாலியமங்கலம் ராஜேந்திரன், சுடரொளி உள்ளிட்ட கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியையும்
வீர வணக்க நிகழ்வையும் சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *