பதவிக்காக இப்படியா?

1 Min Read

திருச்சூர்,  மார்ச் 27 ‘கொஞ்சம் செல்வாக்கு மட்டும் இருந்தால் போதும்… எப்போது வேண்டுமானாலும், எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டம் பிடிக்கும் வசதி அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது…’  என, கிண்டல் அடிக்கின்றனர், கேரள மக்கள்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; இங்கு, ஏப்., 9 இல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருச்சூர் மாவட்டம், நாட்டிகா தொகுதியில் வெற்றி பெற்றவர், சி.சி.முகுந்தன். ஆனால், தற்போது இவர் அடிக்கும், ‘பல்டி’களைப் பார்த்து, அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். சமீபத்தில், நாட்டிகா தொகுதியில் மீண்டும் போட்டியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேலிடத்திடம், ‘சீட்’ கேட்டு விண்ணப்பித்தார், சி.சி.முகுந்தன்; ஆனால், கட்சி மேலிடம் கைவிரித்து விட்டது.

அடுத்த நாளே, காங்கிரஸ் மேலிடத்தைத் தொடர்பு கொண்டு பேசிய முகுந்தன், ‘உங்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறேன். எனக்கு நாட்டிகா தொகுதியில் வாய்ப்பு தாருங்கள்…’ என்றார். உள்ளூர் காங்., பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் மேலிடமும் அவரை கைவிட்டது.

சற்றும் மனம் தளராத முகுந்தன், பா.ஜ.,வை அணுகினார்; அங்கு அவருக்கு உடனடியாக, ‘சீட்’ கொடுத்து விட்டனர். இதைப் பார்த்த சக அரசியல்வாதிகள், ‘அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியையே, முகுந்தன் மிஞ்சி விட்டாரே…’ என, கிண்டல் அடிக்கின்றனர்..

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *