சென்னை, மார்ச் 27 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் இதரப் பொருட்களை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெற, மாவட்டந்தோறும் குறைதீர்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால், இந்தக் குழுக்களை அணுகித் தீர்வு காணலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பறிமுதல் தொடர்பான புகார்கள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க முதற்கட்டமாகச் சில மாவட்டங்களுக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: திருவள்ளூர்: 7373704202 சென்னை: 9551055182 காஞ்சிபுரம்: 9442745251 இதேபோல் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரத்யேகத் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வசம் இருக்கும் பணத்திற்குரிய வங்கி ஆவணங்கள், ரசீதுகள் அல்லது ஆதாரங்களை இந்தக் குழுவிடம் சமர்ப்பித்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகையை மீட்க நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
