தருமபுரி, மார்ச் 27- தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23.3.2026 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டக் கழகத் தலைவர் பீமதமிழ் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருப்புச்சட்டை மா.முனியப்பன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் இளைய. மாதன், கு.சரவணன் முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிரணி செயலா ளர் தகடூர். தமிழ்ச்செல்வி, ப.க. மாவட்ட தலைவர் க. செந்தில் குமார். ப.க மாவட்ட செயலா ளர் இர.கிருஷ்ணமூர்த்தி கருத்துரையாற்றினர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் வழிகாட்டுதல் உரை வழங்கினார்.
தீர்மானங்கள்
எதிர்வரும் 28.3.2026 அன்று பட்டுக்கேட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவுப் பொதுக்கூட்டம் தருமபுரியில் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் நமது திராவிட மாடல் அரசு, தி.மு.க அரசை அரியணை ஏற்ற ஓயாமல் உழைப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிரச்சார கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிறப்பாக வரவேற்க ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் 25, 26 ஒகேனக்கல்லில் பயிற்சிப் பட்டறை நடத்த வாய்ப்பைத தந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றியும் சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
கலந்து கொண்டோர்
மு.மனோகரன் மேனாள் மாவட்டத் தலைவர், மு.சிசுபாலன் தொழிலாளரணித் தலைவர், பெ. மாணிக்கம் தொழிலாளரணிச் செயலாளர், பெ.கோவிந்தராஜ் மேனாள் மாவட்டச் செயலாளர், க. சின்னராசு விடுதலை வாசகர் வட்டத் தலைவர், மா.சுந்தரம் பாப்பாரப்பட்டி நகரச் செயலாளர், மாவட்ட மகளிர் பாசறை செயலா ளர், பெ.கோகிலா விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மா.சுதா, சி.ராமசாமி காரிமங்கலம் ஒன்றிய தலைவர், இராஜா மேனாள் மாவட்ட இளைஞரணித் தலைவர், கி.வீரமணி மாவட்ட மாணவரணி தலைவர், ஆர். சின்னசாமி, சி.பிரகாசம், எம்.அருள், மினித்ராசு, சி. சக்திவேல், கே.பாலு, அ. பிரபாகரன், ஊமை. காந்தி, தி.ஞானப்பிரகாசம், ஆர்.பழனி ஆசிரியர் நகர செயலாளர், மு.பழனிவேல், கரு.பாலன் நகர தலைவர், மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர், மகளிரணி மாரவாடி சகுந்தலா, மாணவர் கழகம் உதய குமார். இறுதியாக மாவட்ட து.செயலாளர் நன்றியுரையாற்றினார்.
