தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களைக் காக்க தி.மு.கழக கூட்டணியை ஆதரிப்பீர்! பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

1 Min Read

தஞ்சாவூர், மார்ச் 26– வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணி நிறுவனர் தலைவர் பழ. நெடுமாறன். தஞ்சாவூரில் 24.3.2026 அன்று நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணியின் செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் மேலும் தெரி வித்ததாவது:

இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களைவிட வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாடு நலன்கள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு, ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டின் மீது திணிக்கவும், தமிழ்த் தேசியம் உள்பட மொழிவழி தேசிய உணர்வுகளை அடக்கி ஒடுக்கவும் பா.ஜ.க. முற்படுகிறது. மேலும், இந்து மதவாத தேசியத்தைத் தூக்கிப் பிடிப்பதற்காக பா.ஜ.க. பல கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு களம் இறங்கியுள்ளது.

இந்தப் பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் முதன்மை யான கடமை. இந்தக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் நோக்கத்துடனும், ஜனநாயகக் கடமையை ஆற்றும் நோக்கத்துடனும் பா.ஜ.க. கூட்ட ணியை முறியடிக்கும் வகை யில் திமுக கூட்டணிக்கு ஆதரவ ளித்து வாக்களிக்கமுன் வருமாறு தமிழ்நாட்டு மக் களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் பழ.நெடுமாறன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *