வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 1,92,636 மாணவ, மாணவிகள் பயன் : பெற்றோர்கள் மகிழ்ச்சி

3 Min Read

வேலூர், மார்ச் 26 முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 3,855 பள்ளிகளில் மொத் தம் 1 லட்சத்து 92 ஆயிரத்து 636 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

காலை உணவு திட்டம்

மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்திட முதலமைச்சர் காலை உணவு திட்டம், கற்றல் திறனை அதிகரிக்க எண்ணும் எழுத்தும் திட்டம், உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், வேலை வாய்ப்பு உருவாக்கிய நான் முதல்வன் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காலை உணவு திட்டத் தில் திங்கட்கிழமை பொங் கல், காய்கறி சாம்பார். செவ் வாய்க்கிழமை ரவா, காய்கறி கிச்சடி சேமியா, சாம்பார் கிச்சடி, கோதுமை கிச்சடி. புதன்கிழமை ரவா பொங்கல், வெண்பொங்கல் சாம்பார். வியாழக்கிழமை சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா காய்கறி சாம்பார். வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு ரவா, காய்கறி கிச்சடி சேமியா சாம்பார் என காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை நாள்தோறும் சுவைத்து சாப்பிடுகிறோம் என்று மனமகிழ்ந்து மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 769 அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 40,418 மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட் டத்தில் 1,734 பள்ளிகளில் 80,460 மாணவ, மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். இதில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மட்டும் 91 பள்ளிகளில் 4,028 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 648 தொடக்கப்பள்ளிகளில் தினமும் 39,758 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். ஆம்பூர் நகராட் சியில் உள்ள 23 பள்ளிகளில் 4,083 பேர், ஜோலார்பேட்டை நகராட்சியில் 12 பள்ளிகளில் 1,184 பேர், திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 24 பள்ளிகளில் 2,742 பேர், வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 23 பள்ளிகளில் 3,718 பேர் பயன்பெற்று வருகின் றனர்.

மேலும் ஆலங்காயம் ஒன்றியம், பேரூராட்சியில் உள்ள 85 பள்ளிகளில் 5,026 பேர், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 102 பள்ளிகளில் 4,596, கந்திலி ஒன்றியத்தில் உள்ள 120 பள்ளிகளில் 4,419 பேர், மாதனூர் ஒன்றியத்தில் உள்ள 95 பள்ளிகளில் 5,397 பேர், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 67 பள்ளிகளில் 3,942 பேர், திருப்பத்தூர் ஒன்றியத் தில் உள்ள 97 பள்ளிகளில் 4,651 பேர் என மொத்தம் 39,758 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத் தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், ஆற்காடு, திமிரி, வாலாஜா கிழக்கு, மேற்கு ஆகிய 8 கல்வி வட்டாரங்கள் உள்ளன. இங்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 704 பள்ளிகளில் 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் தின மும் காலை உணவு சாப்பிடு கின்றனர்.

வேலூர், திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 3,855 பள்ளிகளில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 636 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த காலை உணவு திட்டம் மூலம் ஏழை, எளிய மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்து வருகின் றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *