இந்நாள் – அந்நாள்

2 Min Read

ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பிறந்தநாள்

 

நவீன உலகில் ‘பரிணாம வளர்ச்சி’ குறித்த புதிய சிந்த னையை முன்வைத்த ‘கடவுள் ஒரு மாயை’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பிறந்தநாள்

ஆப்பிரிக்க நாடான கென்ய தலைநகர் நைரோபியில் தையற்கலைஞருக்கு மகனாக 1941 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று பிறந்தார். இன்று அவரது 85-ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வந்தாலும் இவர் தீவிரமான இறை மறுப்பாளர்  மற்றும் பகுத்தறிவாளர். மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளை அறிவியல் பூர்வமாக விமர்சிப்பதில் உலகளவில் அறியப்படுபவர்.

இவரது “The Selfish Gene” (சுயநல மரபணு) மற்றும் “The God Delusion” (கடவுள் ஒரு மாயை) ஆகிய புத்தகங்கள் உலகப் புகழ்பெற்றவை.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், பரிணாம வளர்ச்சி மற்றும் மரபணுக்கள் குறித்து பல புதிய சிந்தனைகளை முன்வைத்துள்ளார். இன்று இணைய உலகையே ஆண்டுகொண்டு இருக்கும்  ‘மீம்’ (Meme) என்ற சொல்லை (ஒருவரின் திட்டம், நடத்தை, தனித்துவம் மற்றொரு வரால் செய்துகாட்ட முதன்முதலில் அறிமுகப் படுத்தியவர் இவரே.

போலியோவால் நிகழ்ந்திட்ட புரட்சி!

 

ருத்துவ வரலாற்றில் மார்ச் 26, 1953 ஒரு பொற்காலமாகும். டாக்டர் ஜோனாஸ் சால்க் (Jonas Salk) போலியோ தடுப்பூசியைக் கண்டறிந்த அந்த அறிவிப்பு, வெறும் அறிவியல் முன்னேற்றம் மட்டுமல்ல, அது மனிதனின் சிந்தனையில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கிபுரட்சியை ஏற்படுத்தியது.

போலியோ தடுப்பூசியின் வருகை, அதுவரை குணப்படுத்த முடியாத கொடிய நோயாகக் கருதப்பட்ட இளம்பிள்ளை வாதத்தை முறியடிக்க முடியும் என்பதை நிரூபித்தது. இது தற்செயலான ஒரு நிகழ்வு அல்ல; பல ஆண்டுகால கடின உழைப்பு மற்றும் முறையான மருத்துவப் பரிசோதனைகளின்

தடுப்பூசி கண்டறியப்படுவதற்கு முன்னால், நோய்கள் ஏற்படுவதற்குப் பின்வரும் காரணங்கள் கற்பிக்கப்பட்டன நோய் என்பது கடவுள் கொடுத்த சாபம், முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவாகவே  நோயால் பாதிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை.

ஜோனாஸ் சால்க்கின் கண்டுபிடிப்பு இந்த வாதங்களை அறிவியல் பூர்வமாக உடைத்தது. ஒரு வைரஸால் ஏற்படும் பாதிப்பை, மனிதன் உருவாக்கிய மருந்தால் தடுக்க முடியும் என்பது உறுதியானபோது, நோய்க்கான காரணம் “கர்மா” அல்ல, “உயிரியல்”  என்பது உலகிற்குப் புரிந்தது..

மதம் மற்றும் சடங்குகள் மூலம் நோயைத் தீர்க்க முயன்ற சமூகம், தடுப் பூசி மற்றும் சுகாதாரத்தின் முக்கியத் துவத்தை நோக்கித் திரும்பியது குறிப்பிடத்தக்கதாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *