சமஸ்கிருதம் செத்து ஒழிந்தது ஏன்?

2 Min Read

நாடாளுமன்றத்தில் காங்கிரசைச் சேர்ந்த  ஜெய்ராம் ரமேஷ் கூறிய கருத்து முக்கியமானது.

நாடாளுமன்றத்தில் மொழிகள் தொடர்பான விவாதம் குறித்து கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

“தமிழ் தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படும் மொழி அல்ல, அது தேசிய மொழி, அதே போல் தான் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஒடிசா போன்றவையும் தேசிய மொழிகள் ஆகும். இந்த மொழிகளை கோடிக்கணக்கான மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நீங்கள் வெறும் 15,000 மக்கள் கூட பேசாத மொழிக்கு ரூ.650 கோடிகளை செலவழிக்கிறீர்கள்.

கலாச்சார அமைச்சரகம் இதற்குப் பெருமளவு தொகையை செலவு செய்துள்ளது. சமஸ் கிருதம் பழைமையான மொழி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். இருக்கட்டும். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட சமஸ்கிருதம் பேசுகிறார்களா என்று தெரியவில்லை!

வால்மீகி ராமாயணத்திலிருந்து ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

 அசோகவனத்தில் அனுமன் சீதையைப் பார்த்ததும் என்ன மொழியில் சீதையிடம் பேச வேண்டும் என்று குழம்பி, “நான் சமஸ்கிருதத்தில் பேசினால் என்னை யார் என்று தெரியாமல் (ஒரு வேளை ராவணனின் ஆள் என நினைத்துக் கொள்வார்). அவஸ்யமே வக்தவ்யம், மானுசம் வாக்யமர்தவம், (அதாவது நான் மக்கள் மொழியில் பேசுவேன்)   எனவே நான் மக்களின் மொழியில் பேசுவேன்” என சொல்லியதாக வால்மீகி ராமாயணம் கூறுகின்றது. 

ஆகவே இந்த அரசு தமிழ்மொழிக்கும், கன்னடத்திற்கும் மலையாளத்திற்கும், ஒடிசாவிற்கும் அதிகம் செலவழியுங்கள். இவைதான் இந்திய கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கும் மொழிகள் ஆகும். 

 சில நபர்கள் மட்டுமே பேசும் மொழிக்காக செலவு செய்ய வேண்டாம்” 

காங்கிரசின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது!

ஏதோ தமிழ்நாட்டுக்காரர்கள்தான் சமஸ் கிருதம், ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்று கருதக் கூடாது, தமிழ்நாட்டையும் கடந்து இத்தகைய குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

சமஸ்கிருதம் செத்து சுண்ணாம்பான ஒரு மொழி. பார்ப்பனர்கள்கூட தங்கள் வீடுகளில் சமஸ்கிருதம் பேசுவதில்லை. 

கோயில்களிலும், கல்யாணம், கருமாதிகளிலும் மந்திரங்கள் என்ற பெயரால் புரோகிதர்களால் ஒப்பு விக்கப்படும் மொழிதான் இது. அதுகூட அர்த்தம் தெரிந்து சொல்லுகிறார்களா என்பது கேள்விக்குறியே!

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல் வால்கர் ‘ஞான கங்கை’ நூலில் இந்தியாவின் மொழிப் பிரச் சினைக்குத் தீர்வு சமஸ்கிருதம்தான் என்று கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இந்தியாவில் நடைபெறு வதால்தான் செத்துப் போன ஒரு மொழிக்குக் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அழு கிறார்கள்.

உண்மையைச் சொல்லப் போனால் சமஸ்கிருதத்தை சாகடித்தவர்களே இதே பார்ப்பனர்கள்தாம்.

“பார்ப்பனர்களைத் தவிர நாட்டின் பெரும் பான்மையினரான மக்களை  ‘சூத்திரர்’களாக்கி படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும். மற்றவர்  படித்தால் அதை சூத்திரர்கள் காதால் கேட்கவும் கூடாது – கேட்டால்  காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்” என்று சாஸ்திரம் எழுதி வைத்த வர்கள் பார்ப்பனர்கள் தானே! பெரும்பான்மை மக்கள் பேசக் கூடாது என்றதன் விளைவுதான் சமஸ்கிருதம் செத்து ஒழிந்ததற்குக் காரணம் என்பதை ஆர்.எஸ்.எஸ்.சும், பார்ப்பனக் கூட்டமும் உணர வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *