காவேரிப்பட்டணம், மார்ச் 24- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் காவேரிப்பட்டணம் காந்தி நகர் பூ.இராசேந்திரபாபு இல்லம் எதிரில் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம் தலைமையில் 22.3.2026 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனி வாசன், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
காந்திநகர் கிளைப் பொறுப் பாளரும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளருமான பூ. இராசேந்திரபாபு அனை வரையும் வரவேற்றார்.
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிட மணி சிறப்புரை வழங்கினார்.
அவர் பேசியதாவது: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி வருகின்ற 2026- சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி களின் வேட்பாளர்களை அதிக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம். இது நமது முதல் பணி என்று தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அறி விப்பிற்கு இணங்க திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை மீண்டும் இரண்டாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வரவேண்டும் அப்போதுதான் அனைவருக்கும் அனைத்தும் என்ற திராவிட மாடல் ஆட்சி யின் சமூகநீதியை வகுத்தலிக்கும் வல்லமை பெற்ற தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களின் கடந்த ஆட்சியின் அய்ந்தாண்டு ஆட்சியின் சாதனைகளை ஒவ்வொரு இல்லத்திலும் பயன்பெற்று இருப்பதை மக்களிடம் எடுத்துக் கூறி தொடர் பிரச்சாரங்களை தொடர்ந்து செய்வது நமது தலையாய கடமை என்பதை எடுத்துக் கூறினார்.
இக்கூட்டத்தில் மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, இராமபுரம் கிளைக் கழக நிர்வாகி இரஞ்சித், விசிக இராஜேஷ், காந்திநகர் காமராஜ் உள்பட கழகத்தோழர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக புலியாண்டூர் சி.இராசா நன்றி கூறினார்.
காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment
