சென்னை, மார்ச் 23- தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் உலகளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் சவால் களையும் எதிர்கொள்ளும் வகையில், சென்னை அய்.அய்.டி (IIT Madras) நான்கு புதிய முதுநிலை பட்டப்படிப்புகளை இந்தாண்டு அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்வதையும், குறிப்பிட்ட துறைகளில் போதிய திறன் படைத்த வல்லுநர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எம்.ஏ. (M.A.) மற்றும் எம்.டெக். (M.Tech.) படிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:
எம்.ஏ. பொதுக் கொள்கை (M.A. Public Policy): மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த இந்தப் படிப்பு, கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்த உதவும்.
எம்.டெக். செமிகண்டக்டர் தொழில்நுட்பம் (M.Tech. Semiconductor Material Technology): தற்போதைய மின்னணு சாதனங்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எம்.டெக். இயந்திர பொறியியல் (M.Tech. Mechanical Engineering): இயந்திரவியல் துறையின் நவீன நுட்பங்களை உள்ளடக்கியது.
எம்.டெக். ரோபோட்டிக்ஸ் (M.Tech. Robotics): தானியங்கி மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையில் வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்படும்.
“நாட்டின் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை அய்.அய்.டி தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நான்கு புதிய முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பக் கல்வி மற்றும் சமூக அறிவியல் என இருவேறு தளங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய படிப்புகள், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
