தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் நியமனம்

சென்னை, மார்ச் 24 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சிறப்புப் பார்வையாளராக பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு

சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் அவர்களுக்கென சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயகர் பவன் இணைப்பு கட்டடத்தின் 412-ஆவது அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்கள் அல்லது விவகாரங்கள் குறித்து இவரைத் தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்: தொலைப்பேசி எண்: 044 – 2833 8378 செல்பேசி எண்: 78453 21461 மின்னஞ்சல் முகவரி: [email protected] மேலும், இவருடைய தொடர்பு அலுவலரை (Liaison Officer) 95513 22999 என்ற செல்பேசி எண் வாயிலாக அணுகலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *