சென்னை, மார்ச்.22- சுயநலத்துக்காக சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல் தமிழ்நாட்டை டில்லியிடம் அடகுவைக்க அ.தி.மு.க. தயங்காது என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி உள்ளார்.
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை டில்லியில் நடந்து வருகிறது. இதற்காக டில்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 19.3.2026 அன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உழைப்பது ஒன்றே லட்சியம்
இதனை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் இதை சுட்டிக்காட்டி கூறியிருப்பதாவது:-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்திடும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயக அறப்போர்க் களத்திற்குக் கொள்கை வீரர்களாக தி.மு.கழகத்தினர் அணிவகுக்கும் நேரம் இது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை உங்களில் ஒருவனான நான், உங்களின் குரலாக எடுத்துச் சொன்னேன்.
வெற்றி நிச்சயம் அதற்கான இலக்கை அடைவதற்கு எவ்வித சமரசமுமின்றி இயக்கத்திற்காக உழைப்பது ஒன்றே லட்சியம். அந்த உறுதியுடன் தான் திமுக தனது தோழமைக் கட்சிகள் அடங்கிய மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் 2026 சட்டமன்றத்தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. திராவிட மாடல் 2.0 அரசு அமைந்தே தீரும்.
உங்களில் ஒருவனான என் மனதில் அந்த உறுதி இருக்கிறது. அதற்குக் காரணம், எத்தகைய எதிர்ப்புகளையும், சூழ்ச்சிகளையும் முறியடித்திடும் ஆற்றல் பெற்ற தொண்டர்களாகிய நீங்கள் உறுதுணையாக இருந்து உழைப்பது தான். அதனால்தான் உங்களின் முகம் காணும்போது நான் உற்சாகமடைகிறேன், ஊக்கம் கொள்கிறேன்; உத்வேகம் பெறுகிறேன்.
தேர்தல் அறிக்கை
தமிழ்நாடு – 2030 எனும் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையிலும், அதனை சிறப்பாகவும், நேர்த்தியாகவும் நிறைவேற்றுகின்ற வகையிலும் கூடுதல் அம்சங்களுடன் 2026 தேர்தல் களத்திற்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. எந்தத் தேர்தல் களமாக இருந்தாலும் தேர்தல் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய அறிக்கை என்றால் அது நமது தேர்தல் அறிக்கைதான்.
2021 முதல் 2026 வரையிலான 5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத சாதனைத் திட்டங்களையும், இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றக்கூடிய முதன்மையான திட்டங்களையும் நிறைவேற்றியுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், அதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள பயன்களையும், அவர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் இடைவிடாது பரப்புரை செய்யும் பணியை தொண்டர்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.
எளிதாக இல்லை
தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியினர் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் கழக அரசின் சாதனைகளைப் பதிவிட்டு, அனைத்துத் தரப்பு மக்களிட மும் அதனைக் கொண்டு சேர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி பல்வேறு சார்பு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகளும் பேஸ் புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் என அவரவர் சமூக வலைத்தளக் கணக்குகளில் தி.மு.க.வின் சாதனைகளைப் பதிவிட்டுப் பரப்பிட வேண்டும்.
கடந்த அய்ந்தாண்டுகால ஆட்சியைச் சிறப்பாக நடத்தினோம். ஆனால், அது நமக்கு எளிதானதாக இல்லை. தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பா.ஜனதா அரசின் தமிழர் விரோத – பழி வாங்கும் போக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர் கொண்டு, மாநில உரிமைக் கான போராட்டத்தைத் தொடர்ந்தபடியே, ஜனநாய ம் கம் காக்கும் அறப்போர்க்களத்தில் நின்றபடியேதான் – எண்ணிக்கையில் அடங்காத – சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். – அதனால்தான், 2026 தேர்தல் களத்தைத் தமிழ்நாடு அணிக்கும், டில்லி அணிக்குமமான தேர்தல் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
டில்லியில் ஏன் இருக்கிறார்கள்?
தமிழ்நாடு -– டில்லி என்பதை முன்வைத்து தான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டில்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும், அவரது சகாக்களும் டில்லியில் இருப்பது எதற்காக? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா? தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா? மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை, இல்லை.. இல்லவே இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள வீடு களில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கென்ன என்ற மனநிலையுடன்தான் எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறனர். தேர்தல் – களத்தைச் சந்திப்பதற்கே டில்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ் நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டில்லி பின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்.!
வெற்றி பெறுவோம்!
தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழ் நாட்டையும் டில்லியிடம் அடகுவைக்கத் தயங்காதவர் கள் அவர்கள் என்பதை மக் கள் அறிவார்கள். இனி எதிர்க் கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டில்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக் கள் உணர்ந்தே இருக்கிறார் கள்.
தமிழ்நாட்டின் உரிமைக ளைக் காப்பதற்கும், தமிழ் நாட்டை வளர்ச்சிப்பாதை யில் கொண்டு செல்வதற்கு மான வலிமை தி.மு.க தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே உண்டு என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை அந்த நம்பிக்கையை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி அத னால் நாம் மக்களிடம் செல் வோம். களத்தில் நின்று வெற் றியைப் பெறுவோம்.
இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.
