பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் ‘TNStartup’இன் Periyar Foundation for Pre-incubation துவக்க விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் கல்வி நிறுவனங்கள்

வல்லம், மார்ச் 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 14.03.2026 அன்று ”Periyar Foundation for pre-Incubation” Centreஇன் என்ற மாபெரும் தொடக்க விழா நடைபெற்றது. TN Start-upஇன் முக்கிய முன்னெடுப்பான Phase-II, Pre-incubation Centre, இளைஞர்களின் புத்தாக்க சிந்தனைகளை கொண்ட ஆரம்ப நிலை Startup களுக்கு ஆதரவு அளித்தல் வளரும் தொழில் முனைவு பயிற்சி அளித்தல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டு, நமது நிறுவனத்தில் தொடங்குவதற்கு Proposal தயாரிக்கப்பட்டு Startup-TN க்கு அனுப்பப்பட்டது. பல்வேறு நிலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக நம் நிறுவனத்திற்கு Pre-incubation Centre தொடங்குவதற்கு அனுமதி உத்தரவு வழங்கப்பட்டது. இதற்கான அனுமதி உத்தரவை நம் நிறுவனத்திற்கு Codissi Trade Centre, Coimbatoreஇல் 10.10.2025 அன்று “TN-Global Startup Summit 2025” என்ற நிகழ்வில் Mr. J.Jeyaranjan, Vice Chairman Planning Commission, Tamil Nadu மற்றும் சிவராஜ ராமநாதன் Mission Director & CEO TN- Startup வழங்கினார்கள். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 22.5 இலட்சம் ஆகும்.

Section-8 Company கீழ் “Periyar Foundation for Pre-incubation“ என்ற பெயரில் அறக்கட்டளை உறுப்பினர்கள் கொண்டு பதிவு செய்யப்பட்டது. Co-ordinator, Manager, Pre-Incubate Associate, Unpaid Interns – 2 Nos. மற்றும் Technical Advisory Committee Members – Representative from Regional IIC Institution, Representative from the Regional Incubation Centre, Representative from the Host Institution, Representative from the Partnering Industry, Representative from a Startup in the region, Representative from Regional Startup Builder (Community) & Representative from Respective District Industry Centre ஆகியோர்களை கொண்டு இத்திட்டம் செயல்பாடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் Industry Partner ஆக நமது முன்னாள் மாணவர் ஜீ.ராஜகணேஷ், (டிஇஇஇ 2005-2008) Director, Vatio Energy India Pvt. Ltd., Chennai அவர்கள் பங்களிப்பை இந்த திட்டத்திற்கு ஆர்வமுடன்அளித்து வருகிறார்.

நமது நிறுவனத்திற்கும் Startup TN Pre-incubation Centre க்கும் Grant-in-Aid Letter Agreement எனப்படும் ஜிஎல்ஏ ஒப்பந்தம் பெறப்பட்டு முதல் தவணை பெறப்பட்டது.

புத்தாக்க திறமைகளை…

14.03.2026 அன்று “Periyar Foundation for Pre-incubation” என்ற இத்திட்டத்தின் தொடக்க விழாவிற்கு இக்கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அய்யா அவர்கள், மாணவர்களின் Innovative Projects-களை பார்வையிட்டு, தலைமையேற்று, இன்றைய மாணவர்கள் புத்தாக்க திறமைகளை இன்றைய சமுதாயத்திற்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்விழாவில் இக்கல்லூரியின் தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் திட்ட இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிவராஜ ராமநாதன், ”Periyar Foundation for pre-Incubation” தொடங்கி வைத்து, இன்றைய மாணவர்கள் புத்தாக்க திறமைகளையும் தொழில் நுட்ப திறன்களையும் Hands on Experience யும் இன்றைய காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் வேண்டும் என்ற விரிவாக தொடக்கவுரையாற்றினார். இவ்விழாவில் ஏஅய் & Robotic Specialist, Transen Dynamics, Managing Director, Dr. Kennithraj Anbu கலந்து கொண்டு வாழ்த்துக்களை பதிவு செய்தார். மற்றும் நமது நிறுவனத்தின் 46ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினர் முனைவர் V.சாந்தி Alumnus ECE (Batch : 1986-89) Professor – Computer Science and Engineering, Vellore Institute of Technology, Chennai இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவின் முன்னதாக இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி வரவேற்புரை யாற்றினார். Periyar Foundation for Pre-incubation என்ற இத்திட்டத் தின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் முனைவர் க.ரோஜா இத் திட்டத்தைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். இக்கல்லூரியின் முதன்மையர் கோ.இராஜராமன் நன்றியுரையாற்றினார். இவ் விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *