கோவையில் குழந்தைகளுடன் பிச்சை எடுத்த வடமாநிலப் பெண்கள் காவல் துறையினர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்

1 Min Read

கோவை, மார்ச் 20- கோவை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சை எடுத்துவந்த மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்களை காவல் துறையினர் மீட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் சிலர், பிறந்து சில மாதங்களேயான பச்சிளங் குழந்தைகளை கையில் ஏந்தியபடி பிச்சை பெற்று வந்தனர். கொளுத்தும் வெயிலிலும், அவ்வப்போது பெய்யும் மழையிலும் பச்சிளம் குழந்தைகளுடன் அவர்கள் சாலையோரம் தவிப்பதைக் கண்ட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இது குறித்த புகார்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்ற காவல் துறையினர் அந்தப் பெண்களை மீட்டனர். விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

குழந்தைகளின் நலன் கருதியும், பாதுகாப்பற்ற முறையில் சாலைகளில் தங்குவதைத் தவிர்க்கவும் இந்தப் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் காவல்துறை எச்சரித்து உரிய பாதுகாப்புடன் அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காவல்துறையினரின் இந்த மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *