தி.மு.க.வில் 160-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் இணைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிகழ்ந்த சேர்க்கை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் 18.03.2026 அன்று மாலை தி.மு.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டிலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் பி.எச். மனோஜ் பாண்டியன் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்றது. இதில் பெண் வழக்குரைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தி.மு.கழகத்தின் கொள்கைகளை ஏற்று இணைந்தனர்.

குறிப்பாக பி. விஜயகுமார் டி. நந்தகுமார் ஏ. சத்யா சி. ராகவன் ஏ.டி. நாகேந்திரன் எஸ். குணசேகரன், எம். பெருமாள் ஜி. ஜெய்சிங்க முத்துக்குமரன் எஸ். பாலாஜி ரோட்டரி என். சிவக்குமார் நிக்சன், அதிசயயா, டி. பவித்ரா, பி. லீனா உள்ளிட்ட முக்கிய வழக்குரைஞர்கள் முதலமைச்சர் முன்னிலையில் முறைப்படி தி.மு.கழகத்தில் இணைந்தனர்.

இந்த இணைவு விழாவின் போது, அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் தி.மு.க சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா. விடு தலை, வழக்குரைஞர் திருமாறன், மற்றும் வழக்குரைஞர் ஆர்.வி. பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *