மயிலம், மார்ச் 17– மயிலம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம் மையார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழக கொள்கை விளக்க பிரச்சாரம் மற்றும் திரா விடம் ஆடல் ஆட்சியின் சாதனைகள் விளக்க. தொடர் Respectful பிரச்சாரக் கூட்டங்கள் 10.3.2026 செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பாக நடை பெற்றது.
காலை 10 மணி முதல் 12 மணி வரை மயிலம் கிராமத்திலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை வீடூர் கிராமத் திலும் மாலை 6:00 மணி முதல் 8 மணி வரை தழு தாளியிலும் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ச.அன்புக்கரசன் தலைமை யேற்றார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்டத் துணைச் செயலாளர் பாஞ்சாலம் ஏ.பெருமாள் தொடக்க உரை நிகழ்த்தினார்.
மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் நாகை மு.இளமாறன் கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை விளக்கி சிறப்புரையாற்றினார்.
மாவட்டக் காப்பாளர் செ. பரந்தாமன் மாவட்டத் தலைவர் இரா.அன்பழகன் பொதுக்குழு உறுப்பினர் வில்லவன் கோதை, பொதுக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி தாஸ், திண்டிவனம் நகரத் தலைவர் உ.பச்சையப்பன், மகளிர் அணித் தோழியர் இ.நிவேதா, அ.கஸ்தூரி, கன்னியம் கழகத் தலைவர் சீ.ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.
