அரியலூர், மார்ச் 16 ‘திமுக வெல்லட்டும்; திராவிட மாடல் தொடரட்டும்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் அரி யலூர் அண்ணாசிலையருகில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11.3.2026 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சி.சிவக்கொழுந்து தலைமையேற்க, ஒன்றியச் செயலாளர் த.செந்தில் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட விவசாய அணித் தலைவர் மா.சங்கர், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெ.இளவரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் லெ. தமி ழரசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ.இளவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் விடுதலை.நீலமேகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றிய பின்னர், கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார். ‘திராவிட மாடல்’ அரசு தொடர வேண்டியதன் அவசியத்தையும், திமுக அரசின் சாதனைகளையும், பா.ஜ.க. தமிழ்நாட்டை வஞ்சிப்பதை விளக்கியும் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.ஜி. மணிகண்டன் நன்றி கூறினார்.
ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் தியாக. முருகன், மாவட்ட துணை தலைவர் இரா.திலீபன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மறவனூர் மதியழகன், ஆட்டோ தர்மா, அரங்கநாடன், பாரி வள்ளல், விளாங்குடி சரத்குமார் விக்னேஷ்உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
