கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.3.2026

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பித்தனர்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இரட்டை என்ஜின் சர்க்கார் அவலம்: மாணவர் சேர்க்கை இல்லாததால், கடந்த அய்ந்து ஆண்டுகளில் உத்தரகாண்டில் 826 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடல்:

தி இந்து:

* பழங்குடியினர், பட்டியல் இனத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டிற்கான வாரியம்,  மம்தா அறிவித்தார். சமூக ஊடகப் பதிவு ஒன்றில், முண்டா (பழங்குடியினர்), கோரா (பழங்குடியினர்), டோம் (பட்டியலினத்தவர்), கும்பகர் (இதர பிற்படுத்தப்பட்டோர்) மற்றும் சத்கோப் (இதர பிற்படுத்தப்பட்டோர்) ஆகிய சமூகங்களின் கலாச்சார மற்றும் மேம்பாட்டிற்காக அய்ந்து புதிய வாரியங்களை அமைக்கத் தனது அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

* கமேனி விவகாரத்தில் மவுனம் காக்கும் இந்தியா அமெரிக்க, இஸ்ரேலிய நண்பர்களை பகைக்க பிரதமர் மோடி விரும்பவில்லை: காங்கிரஸ் கண்டனம்.

தி டெலிகிராப்:

* மராத்தி மொழியை பயிற்றுவிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: அங்கீகாரத்தை ரத்து செய்ய மகாராட்டிரா அரசு முடிவு. 1 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு மராத்தி மொழியை பயிற்று விப்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை, தேசிய மற்றும் பன்னாட்டு கல்வி வாரியங்களுடன் இணைவு பெற்றுள்ள பள்ளிகள் உட்பட, எந்தப் பள்ளிகள் பின்பற்ற தவறுகிறதோ, அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராட்டிரா அமைச்சர் தாதா பூசே எச்சரிக்கை

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *