சென்னை, மார்ச் 14- 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. திமுக கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இதுரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (13.3.2026) திமுக கூட்டணியில் கொமதேக- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொமதேக 2 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில், கொமதேக 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் பற்றிய விவரம்
* காங்கிரஸ் -28 தொகுதி
* முஸ்லிம் லீக் -2 தொகுதி
* ம.ம.க., -2 தொகுதி
* ம.தி.மு.க., -4 தொகுதி
* கொமதேக – 2 தொகுதி
