கடப்பா, மார்ச் 12 திருப்பதி ஏழு மலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருப்பதிக்கு நெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளான சம்ப வம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கொண்டாபுரம் அருகே, சுமார் 21,000 லிட்டர் நெய் ஏற்றிக்கொண்டு திருப்பதி நோக்கிச் சென்ற லாரி ஒன்று ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் கவிழ்ந்தது. விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே தகவல் காட்டுத்தீயாய் பரவ, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கையில் கிடைத்த பாத்திரங்கள், வாளிகள் மற்றும் கேன்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சாலையோரம் கொட்டிக்கிடந்த நெய்யை எடுப்பதற்காக மக்கள் போட்டி போட்டனர். லாரியில் இருந்து கசிந்த நெய்யை போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
ஆதாரங்களை
அழிக்கும் முயற்சியா?
தற்போது திருப்பதி நெய் தரம் குறித்து உச்சகட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன:
லட்டு விவகாரத்தில் நெய் தரம் குறித்த சோதனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேண்டுமென்றே இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டதா? கலப்பட நெய் பிடிபட்டுவிடும் என்ற அச்சத்தில், சாட்சியங்களை மறைக்க லாரி கவிழ்க்கப்பட்டதா? என்ற கோணத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காவல்துறை முதற்கட்ட விசா ரணையில் இது ஒரு தற்செயலான விபத்து என்று கூறினாலும், தற்போதைய அரசியல் மற்றும் ஆன்மிக சூழல் காரணமாக இந்த விபத்து ஆந்திர அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
