புதுச்சேரிபெரியார் பெருந்தொண்டர் கண்ணையனிடம் கழகப் பொறுப்பாளர்கள் நலன் விசாரிப்பு

Viduthalai
1 Min Read

90 வயதான புதுச்சேரி பெரியார் பெருந் தொண்டர் கண்ணையன் அவர்கள் குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விட்டதன் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக இருந்து மருத்துவம் பெற்று வருகிறார்.

செய்தி அறிந்த புதுச்சேரி மாநில திரா விடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி உடன டியாக மருத்துவமனைக்குச் சென்று உடல் நலம் விசாரித்து வந்தார்.  அதனைத் தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் இதயவியல் துறையில் முதுநிலை சுருக்கெழுத் தாளராகப் பணியாற்றும் வி. இளவரசி சங்கர் 08.04.2023 அன்று மருத்துவர்களையும் செவிலியர்களையும் சந்தித்து அய்யாவின் உடல்நலம் குறித்து தெரிந்து கொண்டதோடு மானமிகு.  கண்ணையன் அவர்களை நேரில்  சந்தித்து நலம் விசாரித்தார். 

(தமிழர் தலைவர் அவர்கள் புதுச்சேரி பரப்புரைப் பயணம் சென்றிருந்தபோது அவர் வீட்டுக்குச் சென்று உடல் நலம் விசாரித்தார்கள்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *