சைவ, சமண, பவுத்த தடங்கள் அதிகம் உள்ள பகுதி குருவாடானை சேது நாட்டு மரபு நடைப் பயணம் சொல்லும் தகவல்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சைவ, சமண, பவுத்த தடங்கள் அதிகம் உள்ள பகுதி குருவாடானை

சேது நாட்டு மரபு நடைப் பயணம் சொல்லும் தகவல்!

ராமநாதபுரம், மார்ச் 10- ராமநாதபுரம் மாவட்டத்தில்  சைவ, சமண, பவுத்த தடங்கள் அதிகம் உள்ளது திருவாடானை பகுதியில் தான் என மரபு நடை நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

எண்திசை வரலாற்று மரபுநடைக்குழு, ராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் காண இருநாட்கள் சேது நாட்டு மரபு நடைப் பயணம் ஏற்பாடு செய்துள்ளது. திருவாடானையில் தொடங்கிய நிகழ்வில், தலைவர் நித்யகலா செந்தில்குமார் தலைமையில், செயலாளர் ராதா வைத்யநாதன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது, ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டத்தில் தான் அதிக நெல் விளைச்சல் இருக்கும். இதனால் மாவட்டத்தில் அதிகளவு சிவன் கோயில்கள், சமண, பவுத்த தடங்கள் இங்கு உள்ளன. மன்னர் காலத்தில் இப்பகுதியில் பல ஊர்கள் பார்ப்பனர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இவ்வூர் பற்றி திருஞானசம்பந்தர் 11 பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய மற்ற பதிகங்களில் உள்ளது போல் இதன் 8ஆவது பாடலில் இராவணன் பற்றிய குறிப்போ, 10ஆவது பாடலில் சமண, பவுத்த மதங்கள் பற்றிய கண்டனமோ இல்லாமல் உள்ளது ஆச்சரியமளிக்கிறது. அருணகிரிநாதர் திருவாடானை கோயில் முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். தேவாரப்பாடல்களிலும், கல்வெட்டுகளிலும் இவ்வூர், ஆடானை எனப்படுகிறது.

இக்கோயிலில் பாண்டியர், சேதுபதிகள் கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கோயிலுக்கு நெல் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கி.பி.1636இல், தளவாய் சேதுபதியின் பிரதிநிதி திருமலையன், கோயிலுக்குரிய கிராமங்களில் உள்ளவர்கள், ஒரு காசு, ஒரு பணம், ஒரு கலம் நெல்லு சாமிக்குக் கொடுக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார். இதைக் கொடுக்காமல் இருக்க கைகூலி வாங்குகிறவன், பெண்டாட்டியும், உடப்பிறந்தான் மகளையும், மருமகளையும் எதிரியுடன் கூட்டிக்குடுத்த பாவத்துக்கு ஆளாவார்கள் என கல்வெட்டு எச்சரிக்கிறது.

இயற்கைத் துறைமுகங்கள், நெல் விளைச்சல், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, பாதுகாப்பான வணிகப் பாதைகள் ஆகிய காரணங்களால் 2500 ஆண்டுகளாக வெளிநாட்டு, உள்நாட்டு வணிகர், வணிகக் குழுக்கள் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளனர்’ என்றார்.

பின்பு தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, மாரியூர், திருமாலுகந்தான் கோட்டை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட உள்ளனர். இதில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 50 வரலாற்று ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே

சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் புதிய பாலம்!

சென்னை, மார்ச் 10- சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு ரூ.12.31 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியேசர் மற்றும் தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் 8.9.2026 அன்று கையெழுத்திட்டனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *