ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 6  ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, சென்னைத் தலைமைச் செயலகத்தில் கழகத் தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.அதேபோல், கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் நமது கூட்டணி சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க.வைச் சேர்ந்த எல்.கே. சுதீஷ் ஆகியோர் கூட்டணிக் கட்சியினருடன் மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.நமது அரசியல்சட்ட விழுமியங்களையும் இந்திய நாட்டின் ஒற்றுமை – பன்மைத்துவம் ஆகிவற்றையும் பேணிக்காத்திடத் தொடர்ந்து பணியாற் றுவோம்!”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *