சென்னை, மார்ச் 4– தமிழ்நாடு இளைஞர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
தமிழ்நாடு இளைஞர்களுக்கு பன்னாட்டு அளவில், அதிகள விலான வேலை வாய்ப்புகளை பெருக்கவும், வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தேவையான உயர்தர திறன் மற்றும் மொழி பயிற்சிகளை வழங்கவும் தமிழ் நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (3.3.2026) மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாட்டு வேலை நாடுநர் களை பாதுகாப்பான முறையில் பணியமர்த்தி வரும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தற்போது இளைஞர்களின் உலகளாவிய போட்டித் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த கூடுதல் முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆட்டோமொபைல், தளவாடங்கள் மற்றும் சுகாதார நலன் ஆகிய துறைகளுக்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மய்யங்கள், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தனித்தனியே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டு முயற்சியின் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப இளைஞர்களுக் குத் திறன் பயிற்சி அளிக்கப்படுவ துடன், வெளிநாட்டு நிறுவனங் களைக் கண்டறிந்து தகுதியான வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும். குறிப்பாக, வெளி நாடுகளுக்கு உயர் கல்வி பயிலச் செல்லும் இளைஞர்கள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவாலான ஒன்றிய அரசின் சான்றொப்பம் பெறும் பணிகளை, இடைத்தரகர்கள் இன்றி எளிமையாகவும் சிரம மின்றியும் பெற இத்திட்டம் வகை செய்கிறது.
இந்நிகழ்வில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
எஸ்.எம்.நாசர், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலர் பிரதீப், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
