ஈரான் உச்ச தலைவர் படுகொலை மோடிஅரசின் மவுனம் இந்தியாவின் நடுநிலைத் தன்மையைப் பாதிக்கும்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சோனியா காந்தி கண்டனம்

புதுடில்லி, மார்ச்.3 ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காப்பது இந்தியாவின் நடுநிலைத் தன்மையை பாதிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேச்சுவார்த்தைகள் மற்றும் ராஜ தந்திர நகர்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒரு நாட்டின் உயரிய தலைவரைப் படுகொலை செய்வது பன்னாட்டு சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது. “உலகமே ஒரு குடும்பம்”  என்ற தத்துவத்தை உலக அரங்கில் உரக்கச் சொல்லி வரும் இந்தியா, இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் மவுனம் காப்பது அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

1994-ஆம் ஆண்டு காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு மயமாக்கச் சில நாடுகள் முயன்றபோது, அய்நா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க அன்று ஈரான் உறுதுணையாக நின்றது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் ஈரானுடன் மிகவும் ஆழமான மற்றும் நெருக்கமான ராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த நட்பு நாடாக ஈரான் விளங்கியது. ஆனால், தற்போதைய பாஜக அரசு அந்தப் பாரம்பரிய ராஜதந்திர உறவுகளைக் கைவிட்டுவிட்டு, தற்போதைய புவிசார் அரசியலில் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த மவுனம், நீண்டகால நட்பு நாடான ஈரானுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துவதுடன், பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் நடுநிலைத் தன்மையைப் பாதிக்கும் என்று சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *