ஆதரவற்ற கைம்பெண் வருமான உச்சவரம்பு ரூ.8000 ஆக உயர்வு! தமிழ்நாடு அரசு ஆணை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 3– தமிழ்நாட்டில் ஆதரவற்ற கைம்பெண் சான்றிதழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பை ரூ.4,000-லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி, தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமய மூர்த்தி பிறப்பித்துள்ள அரசாணை வருமாறு:

தமிழ்நாட்டில் ஆதரவற்ற கைம்பெண் சான்றிதழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பு கடந்த 1993ஆம் ஆண்டு ரூ.1,000 ஆக இருந்தது. பின்னர், 2006ஆம் ஆண்டில் இது ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உச்சவரம்பை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, குடும்ப ஓய்வூதியம், தனிப்பட்ட தொழில் வருமானம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களில் இருந்தும் வரும் மாத வருமானம் ரூ.8,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள் மட்டுமே இதில் அடங்குவர்.

மணவிலக்குப் பெற்றவர்கள் ஆதரவற்ற கைம்பெண் பிரிவின் கீழ் வரமாட்டார்கள். அரசுப் பணிகளில் (பே லெவல் 10 வரை) பெண்களுக்கு ஒதுக்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டில், 10 சதவீத இடங்கள் ஆதாவற்ற கைம்பெண்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.

 

மதுரை பா.ஜ.க. பொதுக்கூட்டம்

மோடி இரட்டை விரல் ஒளிப்படம் மாற்றம்

மதுரை, மார்ச் 3- மதுரையில் 1.3.2026 அன்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் (என்டிஏ) பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

இரண்டு விரல் – வெற்றிச்சின்னம்

மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படம் திடீரென மாற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் பின்னணியில், முதலில் பிரதமர் மோடி தனது இரண்டு விரல்களை உயர்த்தி ‘வெற்றிச் சின்னம்’ (Victory Sign) காண்பிப்பது போன்ற ஒளிப்படம் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், மாலை கூட்டம் தொடங்குவதற்கு முன்பே அந்தப் ஒளிப்படம் திடீரென அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக பிரதமர் மோடி கைகூப்பி ‘வணக்கம்’ செலுத்துவது போன்ற புதிய ஒளிப்படம் சில மணி நேரத்திற்கு முன் அங்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னணியில் ஒரு சுவாரசியமான அரசியல் காரணம் சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி காட்டிய இரண்டு விரல்கள் (Victory Sign), தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தை நேரடியாக நினைவுபடுத்துவது போல் இருப்பதாகக் கருதப்படுகிறது.

தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், அந்தச் சின்னத்தை அடையாளப்படுத்துவது போன்ற ஒளிப்படம் இடம்பெறுவது அரசியல் ரீதியாகத் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக அது மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *