அய்ஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழக்கு தமிழ்நாட்டின் அரசாணைக்கு தடை கிடையாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 1– தமிழ்நாடு அய்ஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான உயர் பதவிகளை வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

இந்த பதவி உயர்வு நடைமுறைகள் உரிய விதிகளுக்கு முரணாக இருப்பதாக கூறி, ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழ்நாடு அரசின் இந்த அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை இந்திய அரசியல் சட்டம் 32இன் கீழ் நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மனுதாரர் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகி ரிட் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *