‘‘மறுபடியும் ‘திராவிட மாடல்’ அரசுதான்; நாமும் நம் பங்கை ஆற்றுவோம்!’’

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதே திராவிடம்!
‘அனைவரும் சமம் அல்ல’ என்னும் ஜாதியைக் காப்பதே ஆரியம் – ஆர்.எஸ்.எஸ்.!

ஆவடியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உறுதி!

ஆவடி, பிப்.28  ஏன் தி.மு.க. ஆட்சி மறுபடியும் வரக்கூடாது என்று அத்தனை பேரும் கச்சை கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்? ஏன் சில கூலி பட்டாளங்களைக் கொண்டு வருகிறார்கள்? ஏன் கொள்கை எதிரிகள் விபீஷணர்களை தேடுகிறார்கள்? ஏன் பார்ப்பன ஏடுகள் கடுமையாக நம்மை விமர்சிக்கின்றன?  என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதில் அளித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “மறுபடியும் ‘திராவிட மாடல்’ அரசுதான் வரப்போகிறது. நாமும் நம் பங்கை ஆற்றுவோம்” என்று உரையாற்றினார்!

ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ‘‘இதுதான் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சி? இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி!’’ மற்றும் ‘‘பெரியார் உலகம் நிதியளிப்பு நிகழ்ச்சி’’ என்னும் இருபெரும் பொருண்மைகளில், கடந்த 25.02.2026 அன்று மாலை 6 மணியளவில், ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் பொதுக்கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகக் கொடிகளும், பதாகைகளும், சுவரெழுத்துக்களும் கூட்டத்திற்கு பெருமை சேர்த்திருந்தன. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் க.இள வரசன் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றிச் சிறப்பித்தார். கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மகளிர் அணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

25.02.2026 அன்று மதியம் உடல் நலிவு காரணமாக 101 வயதான பொதுவுடைமைப் போராளி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் காலமானதை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அவரது புகழுடலுக்கு வீரவணக்கம் செலுத்தி விட்டு, ஏற்கெனவே  தள்ளி வைக்கப்பட்டு மறுபடியும் ஒருமுறை தள்ளிவைத்து விடக்கூடாது என்று, ஆவடி மாவட்டக் கழகக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பயணத் தோழர்களுடன் வருகை தந்தார். மிகுந்த எழுச்சியோடு அவருக்கு மாவட்டத் தோழர்கள் வரவேற்பு வழங்கினர். நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், ”வீரவணக்கம்! வீரவணக்கம்! ஜாதி ஒழிப்புப் போராளி எங்கள் தோழர் நல்லக்கண்ணுவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்! வீரவணக்கம்! வீரவணக்கம்! சுயமரியாதைச் சுடரொளியான எங்கள் தோழர் நல்லக்கண்ணுவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பினிலே வீரவணக்கம் செலுத்துகிறோம்” என்று சொல்ல, அனைவரும் அவரைப் பின்பற்றி வீரியமான முழக்கங்களை எதிரொலித்தனர். கழகத் தலைவர் உள்ளிட்ட மேடையில் இருந்தவர்கள் மட்டுமின்றி, எதிரில் அமர்ந்திருந்த தோழர்க ளும், பொதுமக்களும் எதிர்பாராத இந்த வீரவணக்க நிகழ்வில் உணர்வு பூர்வமாக பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி, கொள்கை நிறைவாழ்வு வாழ்ந்து, காலம் சென்ற பொதுவுடைமைப் போராளி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

பங்கேற்றோர்

முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் கி.மு.திராவிடமணி, ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியகுமார், தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் சுந்தரமூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சியின் பொறுப்பாளர் அப்துல் அஜீஸ், ம.தி.மு.க. தொழிற்சங்க தலைவர் அந்திரிதாஸ், ஆவடி டி.டி.ஆர். செங்குட்டுவன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றியிருந்தனர். ஆசிரியரின் வருகைக்குப் பின்பு, அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ரங்கநாதன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அமித்பாபு, தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் க.மு.ஜான், கழகத் தலைவருக்கு முன்னதாக கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, ஆவடி மாவட்டத்தின் மூத்த முன்னோடிகளான பெரியார் பெருந்தொண்டர்கள் ஆ.வெ.நடராஜன், முத்துக்கிருட்டிணன், மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு ஆகியோருக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.

‘‘பெரியார் உலக’’த்திற்கு நன்கொடை!

பெரியார் உலகத்திற்கு ஏராளமானோர் கழகத் தலைவரிடம் நிதியை வழங்கினர். மாவட்டச் செயலாளர் க.இளவரசன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கழகத் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தனது உரையை, ”பொதுத் தொண்டின் இலக்கண மாக திகழ்ந்த அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு நேரில் வீரவணக்கத்தை செலுத்தி விட்டுத்தான் இங்கே வந்தி ருக்கிறேன்” என்று குறிப்பிட்டுவிட்டு, “இந்தியாவில் மட்டு மல்ல; உலக அளவில் இப்படி ஒரு தொண்டு நிறுவனம் இல்லை என்று சொல்லத்தக்க வகையில், பெரியார் உலகம் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு ஆவடி மாவட்டத் தோழர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது தலை தாழ்ந்த நன்றி” என்றும், “சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றும் பாராட்டினார். தொடர்ந்து, ”ஏன் தி.மு.க. ஆட்சி மறுபடியும் வரக்கூடாது என்று அத்தனை பேரும் கச்சை கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்? ஏன் சில கூலிப் பட்டாளங்களைக் கொண்டு வருகிறார்கள்? ஏன் விபீஷணர்களை தேடுகிறார்கள்? என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு, 2026 சட்டப்பேரவைக்கு நடப்பது வெறும் தேர்தல் அன்று; ஆரிய, திராவிடப் போராட்டமே என்று பதிலளித்தார்.

 ‘அனைவருக்கும் அனைத்தும்!’

அந்தப் பதில்களுக்கு ஆதாரத்தைக் காட்ட, ‘‘ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை என்ன? ஜாதி தர்மத்தை வலியுறுத்துவது; அதுதான் பி.ஜே.பி.யின் கொள்கை. காரணம் பி.ஜே.பி.யின் லகான் ஆர்.எஸ்.எஸ்.கைகளில். இதற்கு மூலாதாரம் எது?” என்று கேள்வி பதில் என்று மாறி, மாறி சொன்னவர், அசல் மனுதர்மம் புத்தகத்தை கையில் எடுத்துக் காட்டி, “இதோ, இதுதான் மனுதர்மம். இதில்தான் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை சொல்லப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டு, அதில் ஒரு பக்கத்தை எடுத்து, “சூத்திரனுக்கு அறிவைக் கொடுக்காதே; சண்டை வந்தால் சூத்திரன் இருக்கும் பக்கத்துக்கே தண்டனை கொடு” என்பதைச் சொல்லிவிட்டு, “இந்த மனுதர்மம் தான் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமாக வரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினர் துடிக்கின்றனர். இந்த பேதத்துக்கு எதிராக ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று சொல்வதும், அதற்கு இடையூறாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும் தான் ‘திராவிட மாடல்’ – திராவிட மாடல் அரசு” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே விளக்கினார்.

‘இந்து மதம் எங்கே போகிறது?’

தொடர்ந்து, அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘இந்து மதம் எங்கே போகிறது?’ புத்தகத்தில் ஆரியர் வருகை பற்றி படித்துக் காட்டி, ஆரியர்கள் இந்தியாவுக்குள் மனுஸ்மிருதியுடன் வந்தனர் என்பதை எண்பித்தார். மேலும் அவர், ”தஞ்சை மாநாட்டில் வெளியிடப்பட்ட, ‘பெண் ஏன் அடிமையானாள்?’, ‘தந்தை பெரியார் பெண்களுக்கு செய்தது என்ன?’, ‘அண்ணாவின் கடைசி கடிதம் (உயில்)’ ஆகிய மூன்று புத்தகங்களும் சேர்ந்து ரூ.50 தான். பெண்கள் ஏராளமாக வாங்கி, வீடு வீடாக சென்று புத்தகங்களை வழங்கி பிரச்சாரம் செய்வதை உங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து, “மறுபடியும் ‘திராவிட மாடல்’ அரசுதான் வரப்போகிறது. நாமும் நம் பங்கை ஆற்றுவோம்” என்று சொல்லி, நிறைவாக, ஆவடி மாவட்ட சுயமரியாதைச் சுடரொளிகளாகிவிட்ட கோரா, ஆவடி கந்தசாமி, மொழியன்பன், பட்டாபிராம் சக்கரபாணி, மல்லா மணிமாறன், நாத்திகம் மருத்துவர் பாலு, இல.குப்புராஜ், ஆவடி மனோகரன், திருநாவுக்கரசு, ராமதுரை, மல்லிகா ஆகி யோரை நினைவுகூர்ந்து, தமது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன் நன்றி கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார்.

தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர்  கோ.நாத்திகன், பெரியார் பெருந்தொண்டர் ஞானசேகரன், வழக்குரைஞர் கொரட்டூர் பன்னீர்செல்வம், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் மு.ரகுபதி, ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன், கழகக் காப்பாளர் பா.தென்னரசு, வை.கலையரசன், தாம்பரம் மோகன்ராஜ், வஜ்ரவேல், ரவீந்திரன், மதுரவாயல் சரவணன், முகப்பேர் முரளி, செல்வி, இரா.கலைவேந்தன், சிலம்பரசன், அம்பத்தூர் சிவக்குமார், அறிவுமணி, ஆவடி நகரச் செயலாளர் இ.தமிழ்மணி, வெங்கடேசன், எழுத்தாளர் வி.சி.வில்வம், அரும்பாக்கம் தாமோதரன், பெரியார் பெருந்தொண்டார்கள் தனலட்சுமி – தங்கமணி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஜெயராமன், செயலாளர் கார்த்திகேயன், கன்னடபாளையம் தமிழரசன், திருமுல்லைவாயில் இரண்யன், அம்பத்தூர் சரவணன், கீதா ராமதுரை, இரா.வேல்முருகன், தி,மணிமாறன், கனிமொழி கலையரசன், தென்றல் மணியம்மை, ஜெயந்தி, கி.மணிமேகலை வ.ம.வேலவன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் உள்ளிட்ட பேச்சாளர்கள் உரைகளைக் கேட்டுப் பயன்பெற்றனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *