

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் – ‘தகைசால் தமிழர்’ மறைந்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.2.2026) தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நேரில் சென்று மலர் வளையும் வைத்து, செவ்வணக்கம் செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அமைச்சர் எ.வ.வேலு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த நிருவாகிகள் அனைவரும் இறுதி மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்ந்து அனைவரும் வீர முழக்கமிட்டனர். பிறகு தோழர் நல்லகண்ணுவின் உடலுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கல்லூரிக்குக் கொடையாக அளிக்கப்பட்டது.
