கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.2.2026

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தேர்தல் விதிகள் குறித்த அறிவுறுத்தலை தமிழில் வெளியிடுங்கள், தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல்.

* கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வங்கியில் பண மோசடி: அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ஈஷா அறக்கட்டளை எரிவாயு மயானம் விவகாரம் உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் மத்தியஸ்தம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பொதுப் பதவியில் இருப்பவர்கள் தார்மீகப் பொறுப்பைக் காட்ட வேண்டும்’: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. ஹர்தீப் பூரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் ‘பொறுப்பு உணர்வு இல்லை’ என குற்றச்சாட்டு.

தி இந்து:

* நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம் என்சிஇஆர்டி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்திற்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு; ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்டது. நீதித்துறையை ஒரு மோசடி நிறுவனமாக சித்தரிக்கும் “மிகவும், மிகவும் திட்டமிட்ட நடவடிக்கை”க்குப் பின்னால் “ஊழல்” பற்றிய “தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பு” இருப்பதாக உச்சநீதிமன்றம் கண்டனம்.

தி டெலிகிராப்:

* நீதித்துறை ஊழல் குறித்த எட்டாம் வகுப்பு புத்தகத்தை திரும்ப பெற என்.சி.இ.ஆர்.டி-க்கு ஒன்றிய அரசு உத்தரவு. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், என பிரதமர் மோடி பேச்சு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு அசாம் முதலமைச்சர் ஹிமான் சர்மாவுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது.

குடந்தை கருணா

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *