கேரள மாநிலம் திரிச் சூரில், அன்னமானந்தா மஹாதேவா கோயில் விழாவிற்காக யானைகளை அலங்கரிக்கும் பணியில் பூசாரிகளும், பாகன்களும் ஈடுபட்டிருந்தனர். அப் போது யாரும் எதிர் பாராத விதமாக, பூசாரி ஒருவரை யானை தூக்கி வீசியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக் தர்கள் அங்கிருந்து ஓட் டம் பிடித்தனர். இதில் படுகாயமடைந்த பூசாரி, உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
