இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. மோடி ஆட்சியின் ஜனநாயக அவலம்!
வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது –
அமலாக்கத் துறையை ஏவிவிடுவதுதான் உண்மையான ஜனநாயகமா?
வரும் 2024 தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியை
வெற்றி பெறச் செய்வதுதான் இதற்கு ஒரே தீர்வு!
இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. மோடி ஆட்சியின் ஜனநாயக அவலம்! வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது அல்லது அவர்கள்மீது அம லாக்கத் துறையை ஏவிவிடுவது என்பது தான் உண்மையான ஜனநாயகமா? வரும் 2024 தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அல்லது அதற் கடுத்த நிலையிலோ மதிக்கப்படவேண்டியவை எதிர்க்கட்சிகள் ஆகும்.
பார்லிமெண்டரி ஜனநாயகத்தின் எடுத்துக் காட்டாகக் காட்டப்படும் நாடு பிரிட்டன்; பிரிட் டிஷ் பார்லிமெண்டரி முறையின் முக்கிய கூறு பாடான கேபினெட் சிஸ்டம் (சிணீதீவீஸீமீt ஷிஹ்stமீனீ) என்ற முறையைத்தான் நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதைகள் பின்பற்றி அமைத்துள்ளனர்.
இது அமெரிக்கா போன்ற அதிபர் ஆட்சி (Presidential System) முறை கிடையாது.
பிரிட்டனில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ‘‘விசுவாசமுள்ள எதிர்க்கட்சித் தலைவர்” ‘‘His Majesty’s Loyal Opposition Leader” என்றே அழைக்கப்படுகிறார்.
நியாயமான தேர்தல்மூலமே தோற்கடித்து பதவிக்கு வரவே முயலுவர்
எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் உணர்வு முறை ஆளுங்கட்சிக்கு இல்லாமல், நியாயமான தேர்தல்மூலமே தோற்கடித்து பதவிக்கு வரவே முயலுவர்.
பெரும்பாலும் வெற்றி பெற்ற கட்சியினரை விலைக்கு வாங்குதல், பேரம் பேசுதல் போன்ற ‘அரசியல் அசூசைகளை’ அவர்கள் கையாளுவ தில்லை.
ஆனால், இங்கேதான் ‘‘ஆயாராம் காயாராம்” என்ற கட்சித் தாவல், வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கும் கேவலம் வேர் கொண் டுள்ளது. பா.ஜ.க.வின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் உச்சத்திற்குச் சென்றுள்ள இந்த அரசியல் அவலம் தொடர்கதையாக உள்ளது!
வருமான வரித் துறை – சி.பி.அய். – அமலாக்கத் துறை ஆகியவற்றை
அரசியல் ஏவுகணைகளாக்கி வருகின்றனர்!
அதுபோலவே, அப்படி மசியாது, கொள்கை வழியில் கட்சித் தாவலுக்குத் தயங்குபவர் களுக்கோ இடந்தராது, ஆளும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசை எதிர்த்தால் உடனடியாக அவர்களைத் தங்களது ‘அரசியல் திரிசூலமான’ வருமான வரித் துறை – சி.பி.அய். – அமலாக்கத் துறை ஆகியவற்றை அரசியல் ஏவுகணை களாக்கி, திடீர் சோதனை, வழக்குகள், கைதுகள் மூலம் அரசியல் பழிவாங்குவது தொடர் கதையாகி வருகிறது!
புதுச்சேரியில் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி அரசு எப்படி முந்தைய காங்கிரஸ் கட்சியினரை மாற்றி, அரசு அமைத்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று!
2024 பொதுத்தேர்தல் நெருங்குகிறது என்கிற நிலையில், தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி, அதன் ஒப்பற்ற முதலமைச்சர் ‘சமூகநீதிக் கான சரித்திர நாயகர்’ மு.க.ஸ்டாலின் அவர்களது அமைச்சரவை அமைச்சர்கள், முக்கிய எம்.பி.,க் கள் போன்றவர்களைக் குறி வைத்து இப்படி சோதனை, வழக்குகள், ரெய்டுகள் பாய்வதுபற்றி மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு அவப்பெயரை உண்டாக்கவே!
சில ஏடுகள் ‘கோயபல்ஸ்’ பாணியையே பின்பற்றி, உண்மைக்கு மாறான ஊதிப் பெருக்கப் பட்ட செய்திகளைப் பரப்புதல், பா.ஜ.க. தலை வர்கள் அவற்றைப்பற்றிப் பேசுவது எல்லாம் அரசியல் காழ்ப்புணர்வுவோடு, மக்களுக்குக் கொள்கை அடிப்படையிலான நலத் திட்டங் களைச் செயற்படுத்தி அதன்மூலம் தங்களது ஆட்சிக்கு ஆதரவு பெறாமல், ‘இந்தியா’
(மி-ழி-ஞி-மி-கி) கூட்டணிக்குத் தி.மு.க.தான் வழி காட்டியாக, மூலவராக நமது முதலமைச்சர்தான் இருக்கிறார் என்பதால், அவரது அமைச்சர் களுக்கு மக்கள் மத்தியில் ஓர் அவப்பெயரை உண்டாக்கவே இந்த முறை தொடர்ந்து பின் பற்றப்படுகிறது.
இம்மாதம் நடைபெறும் 5 மாநிலத் தேர்தல் களில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் என்பதால், அவர்கள்மீது இந்த ‘திரிசூலங்கள்’ பாய்ச்சப்பட்டு இருக்கின்றன.
ராஜஸ்தான் முதலமைச்சர் மகன்மீது – சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்மீது டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது இப்படி ஒரு நெருக்கடி, கைது மிரட்டல்கள் தொடரும் நிலை!
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்மீது இப்படி மிரட்டல்கள் நடக் கின்றன.
சட்டம் தன் கடமையைச் செய்வதில் யாருக் கும் தடை இல்லை. ஆனால், அவை அபாண்ட மாக இருப்பதுதான் கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. எம்.பி., ஜெகத்ரட்சகன் வீடு, அவர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சோதனை, தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சோதனை போன்ற செய்திகள்.
2ஜி வழக்கில் ஆதாரங்களைத் தர முடிந்ததா?
அதுபோலவே, ஆ.இராசா அவர்கள்மீது முன்பு 2ஜி வழக்கில் எத்தனையோ பூஜ்ஜியங் களைப் போட்டு 1.75 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று தொடுத்த வழக்கு என்னாயிற்று? ஆதாரங்களைத் தர முடிந்ததா?
மாறாக, இன்றைய ஒன்றிய ஆட்சியான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டி சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்தது. இதன்மீது ‘‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள்” ஆட்சி என்ன நடவடிக்கை எடுத்தது?
சில அதிகாரிகளை மாற்றினால், ஊழல் நிவர்த்தியாகிவிட்டதாக அர்த்தமா?
மக்கள்தான் இறுதித் தீர்ப்பை ஜனநாயகத்தில் தேர்தல்மூலம் அளிப்பவர்கள் – அவர்கள் உன் னிப்பாக கவனித்து வருகிறார்கள்!
தேர்தல் நிதி பெறுவதில் ஒரு சார்பு வாய்ப் புப்பற்றி – ஆளுங்கட்சிக்குள்ள தகவல் தெரிந்து கொள்ளும் அவ்வாய்ப்பு மற்ற எதிர்க்கட்சி களுக்கு இல்லையே! அதையும் அவர்களுக்குத் தருவது ஒன்றே நியாயமான வெளிப்படையான தன்மை என்று உச்சநீதிமன்றம் சொல்லியி ருக்கிறதே!
‘‘அரசியல் பிழைத்தோருக்கு நிச்சயம் அறங் கூற்றமாகும்” என்பது உண்மை!
அதை மக்கள் தேர்தல் முடிவுகள்மூலம் நிரூபிப்பார்கள்.
‘இந்தியா’ கூட்டணி இத்தகைய ஜனநாயக அவலங்களை முறியடிக்கும்!
ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பண பலம், புஜபலம், பத்திரிகைகள் பலம் எல்லாம் தாண்டி, மக்கள் பலம்மூலம் ‘இந்தியா’ கூட்டணி இத்தகைய ஜனநாயக அவலங்களை முறியடிக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாண்டி, மக்கள் அதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதை 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
5.11.2023