தி.மு.க.வை சீண்டிப் பார்த்தால் தமிழ்நாடே பதிலடி தரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, பிப்.22 மதுரை உத்தங்குடியில் நேற்று (21.2.2026) தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளின் 1.9 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் மூர்த்தி வெள்ளி செங்கோல் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வீரம் என்றால் அது மதுரைதான். பாசம் என்றால் அது மதுரைதான். கோயில் என்றால் அது மதுரைதான். சாப்பாடு என்றால் அதுவும் மதுரைதான். இங்கே எல்லாமே சிறந்தது தான்.

எஸ்.அய்.ஆரில் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழகத்தில் எஸ்.அய்.ஆர் பணிகளின்போது வாக்காளர்களை நீக்கவிடாமல் உழைத்த இயக்கம் திமுக.கடந்த 2 மாதங்களில் மட்டும் தி.மு.க. 7 மாநாடுகளை நடத்தியுள்ளது. பூத் அளவில் நம்மை போன்று வலிமையாக உள்ள கட்சி இந்திய அளவில் இல்லை.

மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க. நமது இயக்கத்தைத் தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும்.

200 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெறுவதே நமது லட்சியம். அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி, எனக்கும் சரி  ஓய்வேயில்லை. அன்று வாக்குச் சாவடி வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்கக்கூடாது. தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும். சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *