வெட்டிக்காடு, பிப். 21- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உணவுத் திருவிழா பள்ளியில் இரண்டு குழுக்களாக பிரித்து இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது.
ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு மாணவர்கள் 16.2.2026 அன்றும் 6- முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 17.2.2026 அன்றும் வகுப்பு வாரியாக வழங்கப்பட்ட உணவு வகைகளை சிறந்த முறையில் தயாரித்துக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது மட்டுமல்லாமல் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கி உடலுக்கும் உள்ளத்திற்கும் மனநிறைவை அளித்தனர்.
காட்சிப்படுத்திய உணவு வகைகள் வகுப்பு வாரியாக முதல் வகுப்பு அ பிரிவு – பாசிப்பயறு வகை உணவுகள்
முதல் வகுப்பு ஆ பிரிவு – பழச்சாறுகள்
இரண்டாம் வகுப்பு- கம்பு வகை உணவுகள்
மூன்றாம் வகுப்பு -பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பழவகை உணவுகள்
நான்காம் வகுப்பு- சோறு வகைகள்
அய்ந்தாம் வகுப்பு- சுண்டல் வகைகள்
ஆறாம் வகுப்பு -உளுந்து வகை உணவுகள்
ஏழாம் வகுப்பு- கீரை வகை உணவுகள்
எட்டாம் வகுப்பு – காய்கறி வகை உணவுகள்
ஒன்பதாம் வகுப்பு -கேழ்வரகு வகை உணவுகள்
இவ்வாறாக அனை வரும் பிரம்மிக்கும் வகையில் பாரம்பரியமான உணவுகளை தயாரித்து வழங்கி சிறப்பித்தனர். இறுதியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அவர்கள் பரிசுகள் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் பெற்றோ ருக்கும் நன்றி தெரிவித்தார்.
