திருச்சி, பிப். 20- திருச்சி பொன்மலை திராவிடர் கழகத்தை சேர்ந்த ஜோதி – ராமலிங்கம் மூத்த குமாரர் திருச்சி, சிறீரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதி, பாலாஜி ரெஸிடன்சியில் வசித்து வந்த பெரியார் பெருந்தொண்டர் இரா.குணசேகரன் (எ) பேனா (வயது 73) (பி.எஸ்.என்.எல். ஓய்வு) வயது மூப்பின் காரண மாக பிப்.17 இயற்கை எய்தினார்.
தகவலறிந்து திருச்சி மாவட்ட தலைவர்
ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், திருச்சி மாவட்ட செயலாளர் மகாமணி, பொதுக்குழு உறுப்பினர் ச.சங்கிலி முத்து. திருவரங்கம் நகர தலைவர். சா.கண்ணன், திருவரங்கம் நகர துணைத் தலைவர் த.அண்ணாதுரை. நகர செயலாளர் இரா முருகன். திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் பி. ராமநாதன். பொதுக்குழு உறுப்பினர் சி. கனகராஜ். கழக தோழர் இரா. மோகன்தாஸ். வாழவந்தான் கோட்டை பகுதி செயலாளர் விஜயராகவன். திருவரங்கம் பகுதி ரயில்வே முருகேசன். விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜெயராஜ், திருவரங்கம் திருநாவுக்கரசு. திருவரங்கம் பொன்னுசாமி ஆகிய தோழர்கள் மாலை வைத்த்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
பிப். 18 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மறைந்த பெரியார் பெருந் தொண்டர் இரா.குணசேகரனுக்கு மகேஸ்வரி என்கிற மகளும், மருமகன் ரவி, இரண்டு பேரன்கள் உள்ளனர்.
