கேரள மக்களுக்கு ‘கேரளீயன்’ அடையாள அட்டை மாநில அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், பிப்.20 கேரள மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மக்களுக்கான புதிய குடியுரிமை அடையாள அட்டை தொடர்பான முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

அடையாள அட்டை

கேரளாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ‘கேரளீயன்’ என்ற பெயரில் தனித்துவமான குடியுரிமை அடையாள அட்டை வழங்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநில பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பிறந்து, தற்போது வரை வெளிநாடுகளில் குடியுரிமை பெறாமல் இருப்பவர்கள் அனைவரும் இந்த அடையாள அட்டையைப் பெறத் தகுதியுடையவர்கள்.

ஒருவேளை இந்த அடையாள அட்டையைப் பெற்ற பிறகு, ஒருவர் வேறு நாட்டின் குடியுரிமையைப் பெற்றால், அவர்களது ‘கேரளீயன்’ அடையாள அட்டை உடனடியாக ரத்து செய்யப்படும். அரசு சேவைகள் மற்றும் பல்வேறு துறைகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அடையாள ஆவணங்களுடன், இந்த ‘கேரளீயன்’ அடையாள அட்டையையும் ஒரு முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய முயற்சி கேரள மக்களின் தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன், அரசு சேவைகளை எளிதாகப் பெறவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்படுவதற்கு
சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை

நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்!

புதுடில்லி, பிப்.20  தமிழ்நாடு வக்பு வாரியம் செயல் பட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

வக்பு வாரியம்

வழக்குரைஞர் சவுகத் அலி முகமது தொடர்ந்த வழக்கில், ‘‘திருத்தப்பட்ட புதிய வக்பு வாரிய சட்டப்பிரிவு 14-இன்படி மொத்த உறுப்பினர்களில் இருவர் முஸ்லிம் அல்லாதவர்கள், பார் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் எனக்குழுவில் இடம்பெற வேண்டும். ஆனால் இதைப் பின்பற்றித் தமிழ்நாடு வக்பு வாரியம் அமைக்கப்படவில்லை என்பதால் அதன் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரப் பட்டிருந்தது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு கடந்த ஜன.8-ஆம் தேதி விசாரித்து, தமிழ்நாடு வக்பு வாரியம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை நிறுத்தி வைத்தும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்தும் விசாரணையைத் தள்ளிவைத்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், ‘‘வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, தமிழ்நாடு வக்பு வாரிய செயல்பாட்டுக்கு உயர்நீதிமன்ற விதித்த தடையில்தவறு உள்ளது. வாரியங்களில்உறுப்பினர்கள் பதவிகள் படிப் படியாக நியமிக்கப்படுவதை யும், காலியாக உள்ளதால் வாரியத்தைச் செயல்படத் தடை விதித்ததும் தீர்ப்புகளுக்கு எதிரானது தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்குப்பிறகு எஞ்சியுள்ள உறுப்பினர்களை நியமிக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. வாரியம் செயல்பட இடைக்காலத் தடைவிதித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘வாரியத்தின் 11 உறுப்பினர்களில் 8 பேர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.

உச்சநீதிமன்றம் நிறுத்தி வைப்பு

இதைக் காரணமாகக் கொண்டு வாரியம் செயல்படத் தடை விதிக்க முடியாது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்நடைபெறுவதால் புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல் உள்ளது’’ என்று வாதிட்டார்.

இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீடு மனுவுக்குப் பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கும், சவுகத் அலி முகமதுவுக்கும் உத்தரவிட்டது. மேலும், ‘‘தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின்போது புதிய உறுப்பினர்களின் நியமனம் குறித்த முன்மொழிவை தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தர விட்டது.

 

 

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *