செங்கல்பட்டு, பிப்.20 செங்கை மாவட்ட ஆட்சியர் தி. சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளிடமிருந்து நெல்லினை நேரடியாக கொள்முதல் செய்ய, இதுவரை 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ‘ஏ’ கிரேடு நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545 வீதமும், பொது ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வீதமும் கொள்முதல் செய்யப்படும். கொள் முதலுக்காக விவசாயிகளிடமிருந்து எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மீறி பணம் வசூலித்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலைய புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண். 044 –27427412 எண்ணிற்கு புகார் அளிக்கலாம் எனஆட்சியர் தெரிவித்துள்ளார்.
