சென்னை, பிப்.19 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்து வந்த தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இன்று இணைந்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் சுதீஷ் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது: தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
தே.மு.தி.க.வை வரவேற்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த மற்றும் அக்கட்சி பிரமுகர்களுக்கு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் பூங்கொத்து வழங்கினார்.
தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.!
Leave a Comment
