சூரிய பலகைகளுக்கு பாசி தரும் பாடம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கடல் பாசிகளுக்குள் வியக்கத்தக்க தற்காப்பு நுட்பம் ஒன்று ஒளிந்துள்ளது. ‘சைபோனின்’ (Siphonein) என்ற நிறமி, கடும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் சேதத் திலிருந்து பச்சை பாசிகளைப் பாதுகாப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த இயற்கை ‘சூரியக் கவசம்’ சூரிய வெப்பத்தைத் தடுத்தாலும், ஒளிச்சேர்க்கையை தடையின்றித் தொடர உதவுகிறது.

ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியை வேதி ஆற்றலாக மாற்ற உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமான வெளிச்சம் குளோரோபில் எனும் உயிரணுக்களைச் சிதைக்கக்கூடிய மூலக்கூறுகளை உருவாக்கி விடும். இங்குதான் சைபோனின், சூரிய வெப்ப ஆற்றலைத் திறம்படத் தடுத்து, கடல் பாசிகளின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது.

இந்த நுட்பம் தற்போது பொறியாளர்களைப் பெரிதும் க வர்ந்துள்ளது. பாசிகளில் உள்ள இந்தத் தற்காப்பு மூலக்கூறுகளைப் போலவே, சூரிய மின்சக்திப் பலகைகளையும் வடிவமைக்க முடியுமா என்ற ஆய்வு துவங்கியுள்ளது. இயற்கையின் இந்த ‘ஒளிப் பாதுகாப்பு’ முறையைப் பின்பற்றுவதன் வாயிலாக, அதிகத் திறன் கொண்ட, நீண்ட காலம் உழைக்கக்கூடிய சூரிய பலகைகளை உருவாக்க முடியும்.

இந்தக் கண்டுபிடிப்பு வெறும் பாசிகளைப் பற்றிய உயிரியல் தகவல் மட்டுமல்ல. இது அடுத்த தலைமுறை சூரிய மின்சக்தித் தொழில்நுட்பத்திற்கான ஒரு வரைபடம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *