பத்மசிறீ விருது பெற்ற இரண்டு பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செங்கல்பட்டு, பிப். 19– பத்மசிறீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 2 பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பள்ளியில் வேலைக்கான ஆணையை ஆட்சியர் சினேகா நேற்று (18.2.2026) வழங்கினார்.

அரசு வேலை

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சென்னேரி கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல், மாசி ஆகியோர் பத்மசிறீ விருது பெற்றனர். இவர்கள் விலங்குகள் நல பிரிவில் பத்மசிறீ விருதைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணித்து கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்து சாதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வடிவேல் மகன் சுரேஷ், மாசி மகன் தங்கராசு ஆகியோருக்கு அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் வண்டலூர் அருகேயுள்ள குமிழி அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தோட்டப் பராமரிப்பாளர் மற்றும் இரவு காவலர் பணி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளியில் பணி புரிவதற்கான நியமன ஆணையை ஆட்சியர் சினேகா நேற்று (18.2.2026) வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர், அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்  உடன் இருந்தனர்.

 

இப்படிக் கூட நடக்குமா?

ஜே.இ.இ. தேர்வில்
ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்!

தமிழ்நாடு

புவனேஷ்வர், பிப். 19– ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்கள் மஹ்ரூப் அகமது கான் மற்றும் மஸ்ரூர் அகமது கான். இரட்டையர்களான இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அய்.அய்.டி போன்ற உயர்கல்வி நிலையங்களில் சேர உதவும் ஜே.இ.இ (JEE) தேர்வை இருவரும் எழுதியிருந்தனர்.

இந்த ஜே.இ.இ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மஹ்ரூப் மற்றும் மஸ்ரூர் ஆகிய இருவரும் 300-க்கு 285 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாகியுள்ளனர். வாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த இவர்கள், தற்போது ஜே.இ.இ தேர்விலும் ஒரே மதிப்பெண்ணைப் பெற்று உயர்கல்வி நிலையத்தில் சேரவுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *