தஞ்சை மாநில மாநாட்டிற்கு தனி வாகனம் மூலமாக குடும்பம் குடும்பமாக செல்வோம் ஆத்தூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆத்தூர், பிப். 19- ஆத்தூரில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16.2.2026 அன்று மாலை 5 மணியளவில் இடம் பழைய பேருந்து நிலையம் அருகில் குணசேகன் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட கழகத் தலைவர் அ.சுரேஷ் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் நீ. சேகர் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட காப்பாளர் த.வானவில், மாவட்ட காப்பாளர் இரா.விடுதலை சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ப. வேல்முருகன். நகர தலைவர் வெ. அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையேற்றனர்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன் கருத்துரையாற்றினார்.

பிப்ரவரி 21 அன்று தஞ்சையில் நடைபெற இருக்கும் திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழக மாநில மாநாடு,

திராவிடர் கழக மகளிரணி மகளிர்பாசறை மாநாடு ஆகிய இருபெரும் மாநில மாநாடு நடைபெறுவதால் அம் மாநாட்டிற்கு கழக தோழர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு தனி வாகனத்தில் செல்வது தொடர்பாக

இந் நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. கார் முகிலன், இளைஞரணி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி வீரன், தொழிலாளரணி மாவட்ட தலைவர் மோகன் ராஜ், மாவட்ட மாணவர் கழக தலைவர் ச.அஜித், புத்திர கவுண்டம்பாளையம் கூ.செல்வம்

மேனாள் மாவட்ட பொறுப் பாளர் விஜய்ஆனந்த் எல்அய்சி சண்முகம், ஆத்தூர் ராஜமாணிக்கம், நரசிங்கபுரம் ஆகிய தோழர்கள் கலந்துகொண்டு தஞ்சை செல்வது தொடர்பாக தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்

தீர்மானங்கள்

பெரியார் பெருந்தொண்டர் ஏவி தங்கவேல் வயது 103 கடந்த மாதம் மறைவுற்றதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி காத்தனர்.

ஆத்துருக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக் கூட்ட வாயிலாக நன்றி தெரிவிக்கபட்டது

மேலும் இக் கூட்டத்திற்கு பெரும் பங்களிப்பை செய்த சேலம் மாவட்ட திமுக பொருளாளர் சிறீராம் அவர்களுக்கும், பொருளாதர உதவி புரிந்த ஆத்தூர் நகர பெரும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கபட்டது

பெரியார் உலகத்திற்கு ஆத்தூர் கழக மாவட்டத்தின் சார்பாக ருபாய் 14 லட்சம் தந்து பெருமை படுத்திய அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கபட்டது.

தஞ்சையில் பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் இருபெரும் மாநில மாநாட்டிற்கு தனி வாகனம் மூலமாக குடும்பம் குடும்பமாக செல்வது என தீர்மானிக்கபட்டது

தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு இக்கூட்டம் வலியுறுத்துகிறது

நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *