மகத்தான சாதனை!
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் மூலம் நான்கே முக்கால் கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். இது தமிழ்நாட்டின் மகத்தான சாதனை!
போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்!
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இதுதான் கடவுள் சக்தியோ!
சதுரகிரி மலை ஏறி மகாலிங்கம் கோயிலில் உறவினர்களுடன் ‘சாமி தரிசனம்’ செய்ய சென்ற 60 வயது சுடலை என்ற பக்தர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அந்த இடத்திலேயே மரணமடைந்தார், அந்தோ பரிதாபம்!
மருத்துவப் பயனாளர்கள் மகிழ்ச்சி!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரோஜா தோட்டம்! மருத்துவப் பயனாளர்கள் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி!!
