இந்நாள் – அந்நாள் டாக்டர் சி. நடேசனார் மறைவு (18.02.1937)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பார்ப்பனரல்லாதார் இயக்கத் தின் முன்னோடிகளுள் மூத்தவர் பார்ப்பனரல்லாத  மாணவர் களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த டாக்டர் சி. நடேசனார் அவர்களின் முக்கியப் பணிகள்:

திராவிடன் இல்லம் (1914): சென்னைக்கு கல்வி கற்க வரும் திராவிட மாணவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்ததைக் கண்டு, 1914 ஜூலையில் திருவல்லிக்கேணியில் ‘திராவிடன் இல்லம்’ என்ற விடுதியைத் தொடங்கினார். இங்கு இலவசமாகவும் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டது. இங்கு மாணவர்களுக்கெனத் தனி நூலகமும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த இல்லத்தில் தங்கிப் பயின்ற சர்.ஆர்.கே. சண்முகம் (இந்தியாவின் முதல் நிதியமைச்சர்), எஸ். சுப்பிரமணியம் (உயர்நீதிமன்ற நீதிபதி), தி.மூ. நாராயணசாமி (அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்) போன்றோர் பிற்காலத்தில் மிக உயரிய பதவிகளை அடைந்தனர். பார்ப்பனர் அல்லாத மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்யத் தனி அரசியல் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து, அதற்காக 1912இல் “திராவிடர் சங்க’த்தை தோற்றுவித்தார்.

ஆதி திராவிடர் நலன்: காந்தியடிகளின் ‘ஹரிஜன் இயக்கம்’ தொடங்குவதற்கு முன்பே, ஆதி திராவிட மக்களின் நலனுக்காகத் தீவிரமாகப் பாடுபட்ட முன்னோடித் தலைவராவார்

டாக்டர் சி. நடேசனார் அவர்கள் 1937, பிப்ரவரி 18 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவு குறித்து தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.

நடேசன் நலிவால், சென்னை நகரத்தில் பார்ப்பனரல்லாத மக்கள் முன்னேற்ற விஷயத்தில் உண்மையான பற்றும், கவலையும் இருந்த மக்களின் தலைவர் குழாத்தில் முதன்மையானவர் மறைந்துவிட்டார் என்று சொல்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *