தமிழ்நாடு அரசின் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை வேலை வாய்ப்பு; 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்;
ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரச்சலூர் ஓடாநிலை தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.02.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
நூலகர் மற்றும் காப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Certificate In Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழ்நாடு அரசு விதிகளின்படி பி.சி, எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: 7,700 – 24,200
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2026/02/17702078004646.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து காகிதப் பதிவு (பிரிண்ட்) எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், 3வது தளம், மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம், ஈரோடு மாவட்டம் – 638011
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.02.2026
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
Leave a Comment
