இந்நாள் அந்நாள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு “தந்தைபெரியார் சமூகநீதி விருது”

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

1996-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி –  தமிழர் தலைவர் ஆசிரியருக்குத் தமிழ்நாடு அரசின் உயரிய விருதான “தந்தை பெரியார் சமூகநீதி விருது” வழங்கப்பட்ட  சிறப்புமிக்க நாள் ஆகும்.

அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணிக்கு இந்த விருதை வழங்கினார்.

விருதின் சிறப்பு

மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்கம் தொடர்பான தீர்ப்பு  காரணமாக தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, அதனைச் சட்டரீதியாக உறுதிப்படுத்த  தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, 76-ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் 69% இட ஒதுக்கீடு சட்டம் சேர்க்கப்படுவதற்குத் தமிழர் தலைவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதற்கு சட்ட நுணுக்கப் பார்வையோடு ஆசிரியர் கூறிய ஆலோசனை  பெரும் உந்துசக்தியாக இருந்து சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டது.

பெரியார் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும், சமூகநீதிப் போரில் சமரசமற்றப் போக்கைக் கடைப்பிடிப்பதிலும் ஆசிரியர் அவர்கள் காட்டிய தீவிரத்தை அங்கீ கரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப் பட்டதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *