மதுராந்தகம், பிப்.16 செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அறிவுக்கடல் தையலகத்தில், 14.2.2026 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் அ.செம்பியன் தலைமை வகிக்க, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார் கடவுள் மறுப்பு கூற, கழக மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன் வரவேற்பு உரையுடன், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சே. சகாயராஜ் ஒருங்கிணைப்புரையுடன் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கி யது.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தமது கருத்து ரையில், கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை சிறப்பாக நடத்தியதுபோல், பிப்ரவரி 21ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள கழக இளைஞரணி, மாணவர் கழக, மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை மாநாட்டிலும் செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாய் கலந்துகொண்டு இந்த மாநாட்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு ஏதுவாக தனி வாகனத்தில் மாநாட்டிற்கு சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.
பங்கேற்றோர்
கலந்துரையாடல் கூட்டத்தில் அ.பா.கருணாகரன், பொது குழு உறுப்பினர், மு.பிச்சைமுத்து, ப.க மாவட்ட துணைத் செயலாளர், சமத்துவமணி மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றம், முடியரசன் மறைமலைநகர் நகர தி.க செயலாளர், மறைமலைநகர் மு.அறிவு, மறைமலைநகர் தோழர் ஏழுமலை, மதுராந்தகம் நகர மகளிர் அணி பொறுப்பாளர் நிர்மலா செல்வம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
நிறைவாக மதுராந்தகம் நகர செயலாளர் ஏ.செல்வம் நன்றி கூறி னார்.
