மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும் போது, மூளையில் ஸ்ட்ரோக் உருவாகும்.
இதனால், மூளையில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு, மூளையில் இருந்து உடலுக்கு கிடைக்க வேண்டிய சமிக்ஞை கிடைக்காமல் போவதால், திடீரென்று கை கால் வராமல் செயலற்றுப் போகலாம். இதற்கு அறிகுறிகள் பெரிதாக இல்லை என்றாலும், திடீரென்று தடுமாற்றம், கை கால்கள் மறத்து போவது, உணர்வற்ற நிலை பலருக்கும் உண்டாகலாம். இதில், கை கால் வராமல், செயலற்று போகும் போது, பக்கவாதம் ஏற்படும்.
காரணங்கள்
தண்டுவட பாதிப்பு, விபத்து அல்லது காயம் தண்டுவடத்தை இரண்டாவது மூளை என்று சொல்வார்கள். தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் இயக்கம் செயலற்று போகலாம். எனவே, தண்டுவடத்தில் காயம், விபத்து ஏற்பட்டால், அதனால் கை கால் வராமல் செயலற்றுப் போகலாம். உடலில் உள்ள மிகவும் சிக்கலான அமைப்பு தான் நரம்பு மண்டலம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் போது, உடலில் பல உறுப்புகள் பலவீனமாகும். இதனால், கை கால் வராமல் செயலற்றுப் போகலாம். அதே போல, நரம்பு மண்டலத்தில் ஆட்டோ இம்யூன் குறைபாடு ஏற்பட்டு, அதன் வழியாகவும் பலவீனம் மற்றும் செயலிழப்பு உண்டாகலாம்.
சில நேரங்களில் தொற்று என்று சொல்லப்படும் நுண் கிருமிகளால் ஏற்படும் Infection, தீவிரமாக உடலை பாதித்து, கை கால்களை செயலிழக்க வைத்து, பக்கவாதத்தை ஏற்படுத்தலாம். மூளையில் கட்டி வளர்ந்து அது மூளையின் ஏதோ ஒரு பகுதியில் அழுத்தம் ஏற்படும் போது, கை கால்கள் செயலிழக்கலாம். இது சாதாரண கட்டியாகவும் இருக்கலாம், புற்றுநோய் கட்டியாகவும் இருக்கலாம்.
பக்கவாதம், கை கால் செயலிழப்பை தடுக்க உதவும் ஊட்டச்சத்டுக்களில் ஒன்று வைட்டமின் b12. இந்த வைட்டமின் குறைபாடு கடுமையாக இருக்கும் போது, நரம்புகளை பாதித்து, முதலில் கை கால்களில் உணர்வற்ற நிலையை உண்டாக்கும். பின்னர் பக்கவாதத்தை ஏற்படுத்தலாம்.அதிகப்படியான, நாட்பட்ட மன அழுத்தம் நாட்பட்ட பதற்றம், மன அழுத்தம் ஆகியவை திடீரென்று கை கால் செயலிழக்கச் செய்து, பக்கவாதத்தை உண்டாக்கலாம்.
