15.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பாஜகவின் கிளையாக அதிமுக செயல்படுகிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள இந்தியா ஒப்புதல் என அமெரிக்கா பேச்சு; அப்படி எல்லாம் இல்லை என்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘இது ஒரு பொறி’: புதிய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் ஜவுளித் தொழிலை ‘அழிக்கும்’, ராகுல் கடும் குற்றச்சாட்டு.
தி இந்து:
* புதிய டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் ‘தனியுரிமை’ உரிமையை தடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மாநிலத்திடமிருந்து தகவல்களை பெறும் குடிமக்களின் உரிமையை நிராயுதபாணியாக்குகிறது என்று குற்றம் சாட்டும் மனுவை நாளை (16.2.2026) தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
* கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு: 2025-2026ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3,500 கோடிக்கு தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
* ‘மகளிர் உரிமைத் தொகையை தடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சியை நாங்கள் முறியடித் தோம்’ என திருப்பத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தி டெலிகிராப்:
* முஸ்லிம்கள் மீது பாஜகவின் செயற்கை நுண்ணறிவு (AI) ‘ஆயுதம்’ குறித்து கண்காணிப்புக் குழுக்கள் எச்சரிக்கை, உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கண்காணிப்பு அபாயங்கள் குறித்தும் எச்சரிக்கின்றன. ‘இந்தியா ஏஅய் தாக்க உச்சி மாநாடு 2026: ஜனநாயக பின்வாங்கலின் விளிம்பில் ஏஅய் நிர்வாகம்’ என்ற தலைப்பில், சிறுபான்மையினரை ‘வெறித்தனமாக சித்தரிக்க’ பாஜகவால் உருவாக்கப்படும் ஏ.அய். எவ்வாறு ஒரு கருவியாக மாறி உள்ளது என்பதையும், இந்தியாவில் ‘பாகுபாடற்ற வெகுஜன கண்காணிப்புக்கு’ தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 75% மாநிலங்களில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குறித்த ஆண்டு வாரியான ரரா அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என்கிறது எப்.பி.சி.இ. மன்றம். அந்த நிறுவனம் பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, கருநாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய ஏழு மாநிலங்கள் ரேரா அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஒரு ஆண்டு அறிக்கையைக் கூட வெளியிடவில்லை, மேலும் ஆரம்பத்தில் அறிக்கைகளை வெளியிட்ட மகாராட்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் இந்த நடைமுறையை நிறுத்தி விட்டன.
– குடந்தை கருணா
