பிப்ரவரி-21 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, மாநில மாநாடு,
மாலை 3.30 மணிக்கு தஞ்சை புதுஆற்றுப்பாலம் தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில் புறப்படும் திராவிடர் எழுச்சிப் பேரணி,
மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெறும் திராவிடர்கழகஇளைஞரணி,திராவிட மாணவர் கழக மாநில மாநாடு ஆகியன மிக எழுச்சியுடன் நடைபெற உள்ளன.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்கள்
தங்கள் மாவட்டத்தின் சார்பில் தனிப் பேருந்து ஏற்பாடு செய்து அனைத்து தோழர்களும் குடும்ப குடும்பமாக மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்திட கனிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி!
அன்புடன்
இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
திராவிடர் கழகம்
